ஐசிசி சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
பங்களாதேஷ் அணி பேட்டிங்கில் பலமாகவே இருந்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் நைம் சிறப்பாக விளையாடி 52 பந்தில் 6 பவுண்டரிகள் உட்பட 62 ரன்கள் அடித்தார். மறுபுறம் தாஸ் மற்றும் சாகிப் சொற்ப ரங்களுக்கு வெளியேறினர். அதிரடியாக விளையாடிய ரஹிம் 37 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸ் உட்பட 57 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக பங்களாதேஷ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. ஸ்ரீலங்கா அணியில் 7 பவுலர்கள் பந்து வீசியும் விக்கெட்களை எடுக்க தவறினர்.
Sri Lanka will need 172 runs for a victory
Will they chase this down? #T20WorldCup | #SLvBAN | https://t.co/BzVhmmE7u7 pic.twitter.com/1R69UAs1w2
— ICC (@ICC) October 24, 2021
சிறிது கடின இலக்கை எதிர்த்து ஆட களம் இறங்கியது ஸ்ரீலங்கா அணி. ஓப்பனிங் ஆட்டக்கார் பெரேரா முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை பறி கொடுத்தார். 8வது ஓவரை வீசிய சாஹிப் இரண்டு விக்கெட்களை ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார். பெரிதும் எதிர்பார்த்த அசரங்கா 6 ரங்களில் அவுட் ஆனார். போட்டி மெல்ல மெல்ல பங்களாதேஷ் அணி பக்கம் திரும்பியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த அசலங்கா மற்றும் ராஜபக்சே அதிரடியாக ரன்களை சேர்த்தனர். 49 பந்துகளில் 5 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 80 ரன்களை விளாசினார் அசலங்கா. மறுபுறம் ராஜபக்சே 3 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 53 ரன்கள் குவித்தார். இவர்களது அதிரடி ஆட்டத்தால் ஸ்ரீலங்கா அணி 18.5 ஓவரில் 172 ரன்கள் அடித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
Sri Lanka continue their brilliant form at the #T20WorldCup 2021 #SLvBAN | https://t.co/BzVhmmE7u7 pic.twitter.com/Ie2ikp1Cv7
— ICC (@ICC) October 24, 2021
ALSO READ தோனியை ஆலோசகராக நியமிக்கபட்டதற்கான பின்னணி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR