'IPL' ஃபேனா நீங்க? அப்போ கண்டிப்பா இது உங்களுக்குத்தான்! #Facts-Of-IPL

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஐபிஎல் தொடர்பாக சில சுவாரஸ்யத் தகவல்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம் வாங்க!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 25, 2022, 06:48 PM IST
  • ஐபிஎல்லின் சில சுவாரஸ்யத் தகவல்கள் இங்கே
  • ஐபிஎல் தொடரில் முதல் பந்தை எதிர்கொண்டது யார்?
  • ஐபிஎல் தொடரில் முதல் சிக்ஸர் அடித்தது யார்?
'IPL' ஃபேனா நீங்க? அப்போ கண்டிப்பா இது உங்களுக்குத்தான்! #Facts-Of-IPL title=

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஐபிஎல் தொடர்பாக சில சுவாரஸ்யத் தகவல்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம் வாங்க!

* ஐபிஎல் பல சீசன்களைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. எத்தனையோ பந்துவீச்சாளர்கள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல்லில் முதல் பந்தை வீசியது யார் தெரியுமா? பிரவீன்குமார்தான் அது! 2008ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடியபோது இந்தச் சிறப்புத் தருணம் அவருக்கு வாய்த்தது.

* அதேபோல ஐபிஎல்லில் முதல் பந்தை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் யார் எனும் கேள்வியும் பலருக்கும் இருக்கும். இதற்குப் பதில் தேடி ரொம்பவெல்லாம் அலையவேண்டாம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலிதான் அந்த பேட்ஸ்மேன். கொல்கத்தா அணிக்காக தொடக்கவீரராக அவர் களமிறங்கியபோது முதல் பந்தை எதிர்கொண்டார்.

*அதிரடி காட்டும் ஐபிஎல்லில் டாட் போடுவதே பெரிய விஷயம். இப்படி இருக்கும்போது ஒட்டுமொத்த ஐபிஎல்லில் அதிக டாட் பால் வீசியது எந்த பவுலர் எனத் தெரிந்துகொள்ளவேண்டாமா? தெரிஞ்சிக்கோங்க, நம்ம புவனேஷ்வர்குமார் அந்த லிஸ்ட்டுல முதலிடத்துல இருக்காராம். 1341 பந்துகளை அவர் டாட் பாலாக வீசியிருக்காராம்.

* ஐபிஎல் பத்திப் பேசும்போது சிக்ஸர் பத்தி பேசலைனா எப்படி? யெஸ், ஐபிஎல்ல முதன்முதலாக சிக்ஸ் அடிச்சது நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பிரண்டன் மெக்கல்லம்தான். ஜாகிர்கான் வீசுன பந்துல சிக்ஸர் அடிச்சுத் தொடங்கிவைச்சது அவர்தான்.

* ஐபிஎல்ல முதல் போட்டி யாருக்கு இடையே நடந்துச்சுனு ஞாபகம் இருக்கா? பாதி 2K  கிட்ஸ் அப்போ கிரிக்கெட் பார்க்கவே ஆரம்பிச்சிருக்க மாட்டாங்க. அதனால கண்டிப்பா இதைத் தெரிஞ்சிக்கோங்க. ஆர்.சி.பி- கே.கே..ஆர் அணிகளுக்கு இடையேதான் முதல் போட்டி நடந்தது. இதுல 140 ரன் வித்யாசத்துல கே.கே.ஆர் அணி வெற்றியும் பெற்றது.

* பலருக்கும் தெரியாத ஆச்சர்யமான தகவல் ஒன்னும் இருக்குது. அதாவது, கடந்த 2010ஆம் ஆண்டுல ஐபிஎல் தொடரை யூடியூப்ல நேரடி ஒளிபரப்பே பண்ணிருக்காங்களாம். ஹ்ம்ம்ம்... இப்பவும் அதே மாதிரி பண்ணுனா நல்லாத்தான் இருக்கும்னுதானே மனசுக்குள்ள நினைக்கிறீங்க?!

மேலும் படிக்க | ‘இந்தியன் 360’க்கு ‘இன்டர்நேஷனல் 360’யிடமிருந்து குவிந்த வாழ்த்து மழை! - அதுவும் இப்படியா!

AB de villiers

 

* முதல் போட்டியிலும் 500ஆவது போட்டியிலும் விளையாடிய ஒரே வீரர் யார்னு பார்த்தா அது நம்ம ஜாகிர்கான்தான். முதல் போட்டியில ஆர்சிபிக்காக விளையாடிய அவர், 500ஆவது போட்டி விளையாடியது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக

* ஒரு தொடர்ல அதிக டாட் பால் வீசிய பந்துவீச்சாளர்கள் பட்டியல்ல முதலிடத்தில் இருப்பவர் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். 2013ஆம் ஆண்டு நடந்த தொடர்ல 67.5 ஓவர் வீசிய அவர், அதில் 211 பந்துகளை டாட் பாலாக வீசியுள்ளார்.

* ஐபிஎல்லில் அதிக வயதில் கிரிக்கெட் விளையாடியவர் எனும் சிறப்பைப் பெற்றுள்ளவர் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக்தான். 2016ஆம் ஆண்டு கடைசியாக அவர் விளையாடிய போட்டியின்போது அவரின் வயது  45 வயது  92 நாட்கள். 

* அதிக முறை சிறந்த ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நம்ம மிஸ்டர் 360 தான். ஆம், இதுவரை 25 முறை சிறந்த ஆட்டநாயகன் விருதை வென்று குவித்துள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்!

மேலும் படிக்க | சச்சின் பற்றி இதுவரை தெரியாத 10 சுவாரஸ்யத் தகவல்கள்! #HBDSachin

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News