டிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியை பதிவு செய்த மதுரை பாந்தர்ஸ் அணி

இன்று நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 17, 2018, 12:31 AM IST
டிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியை பதிவு செய்த மதுரை பாந்தர்ஸ் அணி title=

கடந்த 11-ம் தேதி தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 6_வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, மதுரை பாந்தர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து மதுரை பாந்தர்ஸ் தங்கள் ஆட்டத்தை தொடங்கினர். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும், தாக்குபிடுத்து விளையாடி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.

 

 

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற 154 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெற்றியை நோக்கி விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினர் ஆரம்ப முதலே தடுமாறினர். மதுரை பாந்தர்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

 

 

இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஆட்டநாயகனாக ரஹில் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

 

 

Trending News