மும்பையின் வாங்கடே ஸ்டேடியத்தில் பணிபுரியும் 8 ஊழியர்களுக்கு COVID-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 14 வது பதிப்பிற்கு முன்னதா, மைதானத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கோவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டபோது இந்த முடிவுகள் வெளியாகின.
ஏப்ரல் 10 முதல் 25 வரை IPL 202இன் டி 20 10 போட்டிகள் வாங்கடே ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு அனைத்து விதத்திலும் மைதானம் தயார் நிலையில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதும் முதல் போட்டி ஏப்ரல் 10 ஆம் தேதி வாங்கடேயில் நடைபெறவிருக்கிறது.
மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்களில் பொரும்பாலோனவர்கள் தினசரி பணிக்கு ரயில்கள் மற்றும் பேருந்துகள் என பொது போக்குவரத்து மூலமாக வருகின்றனர். எனவே, தற்போது போட்டிகள் முடியும் வரை ஊழியர்களை மைதானத்திலேயே தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை மும்பை கிரிக்கெட் சங்கம் (Mumbai Cricket Association (MCA)) அறிவித்துள்ளது.
வாங்கடே ஸ்டேடியத்தில் உள்ள 19 ஊழியர்கள் கடந்த வாரம் வழக்கமான ஆர்டி-பிசிஆர் (RT-PCR tests) சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். மார்ச் 26 அன்று நடத்தப்பட்ட சோதனைகளின் போது மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. ஏப்ரல் 1 ம் தேதி நடத்தப்பட்ட சோதனைகளில் மேலும் ஐந்து பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெறவுள்ளன. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையிலான சீசன் தொடக்க ஆட்டம் சென்னையில் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2021 இன் பிளேஆப் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும்.
ஒவ்வொரு அணியும் லீக் கட்டத்தில் நான்கு இடங்களில் விளையாடும். 56 லீக் போட்டிகளில், சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு தலா 10 போட்டிகளையும், அகமதாபாத் மற்றும் டெல்லி தலா 8 போட்டிகளையும் நடத்துகின்றன. அனைத்து போட்டிகளும் நடுநிலை இடங்களில் விளையாடப்படும், எந்த அணியும் தங்கள் சொந்த இடத்தில் விளையாடாது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR