ரோஹித் சர்மாவுக்கு பின்... ஐபிஎல் கேப்டன்ஸியை இழக்கும் இந்த முக்கிய வீரர் - கப் வாங்கியும் பிரச்னை!

IPL 2024: ஐபிஎல் தொடரில் மும்பையின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா தூக்கப்பட்டதை போன்று, இந்த முக்கிய வீரரும் தனது கேப்டன்ஸியை இழக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 3, 2024, 04:42 PM IST
  • ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.
  • பல ஐபிஎல் அணிகள் தங்களது பயிற்சி முகாமை தொடங்கி உள்ளன.
  • முதல்கட்ட அட்டவணை மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மாவுக்கு பின்... ஐபிஎல் கேப்டன்ஸியை இழக்கும் இந்த முக்கிய வீரர் - கப் வாங்கியும் பிரச்னை! title=

IPL 2024 Latest News: 17ஆவது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. முதல் 21 போட்டிகளின் அட்டவணை மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருப்பதால் ஐபிஎல் போட்டிகளின் மீதம் உள்ள போட்டிகள் இன்னும் திட்டமிடப்படவில்லை. மக்களவை தேர்தல் தேதிகளும், அட்டவணைகளும் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐபிஎல் தொடரின் மற்ற போட்டிக்கான அட்டவணை வெளியிடப்படும் என தெரிகிறது. 

தயாராகும் ஐபிஎல் களம்

அந்த வகையில், தினந்தினம் ஐபிஎல் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர், ரஞ்சி கோப்பை தொடர் உள்ளிட்டவை நிறைவடைந்த பின்னர் ஐபிஎல் தொடருக்கு வீரர்கள் அவரவருடைய அணிகளின் முகாமில் இணைவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளது. தோனி உள்ளிட்ட வீரர்கள் எப்போது அணியுடன் இணைவார்கள் என ரசிகர்கள் தினந்தினம் காத்திருக்கின்றனர். 

இவை ஒருபுறம் இருக்க அணி நிர்வாகம் தரப்பிலும் பல தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்த இளம் வீரரை இந்த சீசனில் களமிறக்கலாம். தங்களுக்கு எந்தெந்த வீரர்கள் காயம் ஏதுமின்றி முழு தொடரையும் விளையாட தயாராக இருக்கிறார்கள், என்ன காம்பினேஷனை முதற்கட்டமாக முயற்சித்து பார்க்கலாம் ஆகிய வியூகங்களை இப்போத வகுக்க தொடங்கியிருக்கும்.

மேலும் படிக்க | ஐபிஎல்லில் விளையாடுவாரா ரிஷப் பந்த்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

வியூகங்கள்...

இந்த வியூகங்களில், கேப்டன்களை மாற்றுதலும் ஒன்றாகும் என்பதை மறந்துவிடக் கூடாது. பல அணிகள் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன் தங்களின் கேப்டன்ஸி மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்பதை கடந்த காலங்களில் பார்த்திருப்போம். யாருமே எதிர்பாராத விதமாக கூட கேப்டன்ஸி மாற்றப்பட்டிருக்கிறது. 

2017இல் ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி அதிரடியாக நீக்கப்பட்டார், சமீபத்திய உதாரணமாக மும்பை அணிக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்த ரோஹித் சர்மா கேப்டன்ஸியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், வரும் ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன்ஸியிலும் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. 

தற்போது கேப்டனாக செயல்பட்டு வரும் எய்டன் மார்க்ரமிற்கு பதில், ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட பாட் கம்மின்ஸை அணியின் கேப்டனாக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த 2 சீசன்களாக மார்க்ரம் தலைமையில் சன்ரைசர்ஸ ஹைதராபாத் பெரியளவில் சோபிக்காத காரணத்தால் இந்த மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

ஏன் பாட் கம்மின்ஸ்?

இருப்பினும், SA20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கடந்த இரண்டு சீசன்களாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது, இரண்டு சீசன்களிலும் கேப்டனாக மார்க்கரமே செயல்பட்டார். சன்ரைசர்ஸ் அணிக்காக இந்தாண்டும் தென்னாப்பிரிக்காவில் கோப்பையை வென்று கொடுத்த மார்க்ரம், இந்தியாவில் சற்று திணறுவதாக அணி நிர்வாகம் எண்ணுவதாக கூறப்படுகிறது. பாட் கம்மின்ஸிற்கு இந்தியச் சூழலில் நல்ல அனுபவம் உள்ளதால் அவரிடம் கேப்டன்ஸியை ஒப்படைக்க விரும்புவதாக தெரிகிறது. 

பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஓடிஐ உலகக் கோப்பை தொடரையும், இங்கிலாந்தில் நடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான டேல் ஸ்டேனுக்கு பதிலாக நியூசிலாந்து முன்னாள் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஃபிராங்கிளினை சேர்க்க அந்த அணி முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | IND vs ENG: தொடரை வென்றாலும் 5வது டெஸ்ட் மிகவும் முக்கியம்! ஏன் தெரியுமா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News