20 ஓவர் உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன்ஷா அப்ரிடி இடம்பெற்றுள்ளார். காயத்தில் இருந்து குணமடைந்திருக்கும் அவர், அணிக்கு திரும்பியது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர் காயமடைந்திருந்தபோது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என ஷாகீத் அப்ரிடி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஷாகீன் அப்ரிடி காயம்
ஜூலை மாதம் காலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஷஹீன் ஷா அப்ரிடி காயம் அடைந்தார். இதனால் அவர் ஆசிய கோப்பையில் பங்கேற்க முடியவில்லை. அதன் பிறகு ஷாஹீன் ஷா அப்ரிடி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்றார். இதற்காக லண்டன் சென்ற அவர், அங்கேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
மேலும் படிக்க | தோனி செய்ததைபோல் ரோகித் செய்ய வேண்டும்; வாசிம் ஜபார் கேட்பது இதுதான்
ஷாகீத் அப்ரிடி குற்றச்சாட்டு
ஷாகின் அப்ரிடியின் சிகிச்சை குறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகீத் அப்ரிடி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், " ஷாகீன் அப்ரிடி காயமடைந்த பிறகு அவருக்கு எந்த விதமான உதவிகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்யவில்லை. ஷாகீன் அப்ரிடி தன்னுடைய சொந்த பணத்தில் சிகிச்சை மேற்கொண்டார். லண்டனில் நான் அவருக்கு உதவியாக இருந்தேன். மருத்துவரை ஏற்பாடு செய்து கொடுத்து, சிகிச்சையை மேற்கொள்ள ஏற்பாடு செய்தேன்" எனக் கூறியுள்ளார். ஷாகீத் அப்ரிடியின் இந்த கருத்துக்குப் பிறகு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“Shaheen Shah Afridi went to England on his own. He got his ticket by himself. I arranged a doctor for him and he contacted the doctor. PCB haven’t done anything for him” Shahid Afridi. @SAfridiOfficial @iShaheenAfridi #ShaheenShahAfridi #PakistanCricket #T20WorldCup2022 pic.twitter.com/KnQAqGqzYd
— Maham Gillani (@dheetafridian__) September 15, 2022
மேலும் படிக்க | விராட் கோலியை ஓய்வு பெற சொல்லுங்கள்! முன்னாள் வீரர் கருத்தால் சர்ச்சை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ