இந்திய அணியில் நிரந்தரமாக விளையாட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் தன்னுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுத்தார். இதனால் சாம்சன் அப்செட்டில் இருந்தாலும், தன்னுடைய டீசர்டாவது விளையாடட்டும் என பெருந்தன்மையோடு, சூர்யகுமார் யாதவுக்கு கொடுத்துள்ளார். சாம்சனின் டீசர்டை போட்டுக் கொண்டு தான் அவரும் களத்தில் விளையாடினார்.
மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி தேதி மாற்றம்...? பிரச்னை இதுதான்!
பர்படாஸில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்து, சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்தார். வெறும் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர், அதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசியது மட்டுமல்லாமல் 6 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரின் சிறப்பான பந்துவீச்சு மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா ஓப்பனிங் இறங்காமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து 7வது இடத்தில் இறங்கினார். முடிவில் இந்திய அணி 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
Amir Sir) (@AmirSir007) July 28, 2023
இப்போட்டியில் சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 46 பந்துகளில் 52 ரன்கள் விளாசி முத்திரை பதித்தார். இருப்பினும் சாம்சனுக்கு பதிலாக அவரை அணியில் எடுத்ததை பலரும் விமர்சித்து வருகின்றனர். திறமையாக விளையாடி தொடர்ச்சியாக தன்னுடைய திறமையை நிரூபித்து வரும் சாம்சனுக்கு இந்திய அணி வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கி வருவதாக குற்றம்சாட்டியிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இஷான் கிஷனுக்கு மட்டும் மிக அதீத முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதாக சாடியுள்ளனர். கேப்டன் ரோகித் சர்மாவின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும், சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சாம்சனுக்கும் கேப்டன் ரோகித் சர்மாவின் இந்த முடிவு அப்செட்டை கொடுத்தாலும், தன்னுடைய டீசர்ட்டாவது ஆடட்டும் என சூர்யகுமார் யாதவுக்கு கொடுத்துள்ளார்.
(@s_badrinath) July 28, 2023
சூர்ய குமாருக்கான இந்திய அணியின் ஜெர்சி மிகவும் பெரியதாக இருந்ததால் அதனை மாற்றம் செய்ய கொடுத்துள்ளார். அதனால், முதல் ஒருநாள் போட்டியில் பிட்டான ஜெர்சி இல்லாத நிலையில் வெளியே உட்கார வைக்கப்பட்ட சாம்சனின் ஜெர்சியை போட்டுக் கொண்டு முதல் போட்டியில் களமிறங்கினார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சாம்சன் பெருந்தன்மையோடு நடந்து கொண்டிருப்பதாகவும் அவரை பாராட்டியிருக்கின்றனர்.
மேலும் படிக்க | எலைட் வீரர்களை சஸ்பெண்ட் செய்த ஐசிசி! அபராதம் கட்டிய கிரிக்கெட்டர்கள் பட்டியல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ