T20 World Cup 2022 Final: 'சிஎஸ்கே தான் என் வெற்றிக்கு காரணம்' உலகக்கோப்பை நாயகன் சாம் கரன் பெருமிதம்!

நடந்த முடிந்த டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகனாக தேர்வான சாம் கரன் சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்து பேசியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 14, 2022, 12:55 PM IST
  • காயம் காரணமாக மெகா ஏலத்தில் சாம் கரன் இடம்பெறவில்லை.
  • சாம் கரன் வரும் மினி ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
  • வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் மினி ஏலம் நடக்க உள்ளதாக தெரிகிறது.
T20 World Cup 2022 Final: 'சிஎஸ்கே தான் என் வெற்றிக்கு காரணம்' உலகக்கோப்பை நாயகன் சாம் கரன் பெருமிதம்! title=

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் அக். 16ஆம் தேதி குரூப் சுற்று மூலம் தொடங்கிய டி20 உலகக்கோப்பை தொடர், நேற்று நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, உலகக்கோப்பையையும் தூக்கிச்சென்றது. 

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் நிர்ணயித்த 138 ரன்கள் என்ற இலக்கை மிகப்பொறுமையாக விளையாடி, ஆட்டத்தை கைக்கொண்டது. வெற்றிக்கு பென் ஸ்டோக்ஸின் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தார். அவரின் நிதானமான ஆட்டம் இங்கிலாந்தை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளித்து வெற்றிபெற்றாலும், 137 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டியதற்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு என்பது அளவிட முடியாதது. 

அதிலும் குறிப்பாக, சாம் கரன் 4 ஓவர்களை வீசி 12 ரன்களை மட்டும் கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம், தொடரில் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். அந்த பட்டியலில் இலங்கையின் ஹசரங்கா 15 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை பிடித்தார்.

மேலும் படிக்க | T20 World Cup Final : பாகிஸ்தான் தோல்வி... விராட் கோலியின் ரியாக்‌ஷன்!

இதைத்தொடர்ந்து, தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதை அடுத்து தொடர் நாயகன் விருதை சாம் கரன் வென்றார். நேற்றைய இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும் அவரே தேர்வுசெய்யப்பட்டார். 

இதையடுத்து, இரண்டு விருதுகளையும் தனது கைகளில் ஏந்தியப்படி பேசிய சாம் கரன்,"நான் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. எனது அணி வீரர்களிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொண்டேன். இதுபோன்ற தொடரை விளையாடும்போது, வீரர்களிடம் இருந்து பல படிப்பினைகளை கற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து கற்றுக்கொள்ளவும், அனைத்தையும் தெரிந்துகொள்ளவும் நான் முயற்சி செய்கிறேன்.

யாருக்கு தெரியும், வருங்காலத்தில் ஐபிஎல் தொடரிலும் விளையாடலாம். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுடன் விளையாடியதுதான் எனது ஆட்டத்தை மெருகூட்டவும், இதுபோன்ற முக்கிய தொடர்களில் சிறப்பாக விளையாடவும் உதவியது" என்றார்.  

சாம் கரன் ஐபிஎல் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணியிலும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ணியிலும் விளையாடி வந்தார். அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான, மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. 

டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அனைத்து அணிகளும் ஏலத்திற்கு முன் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலையும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலையும் நாளைக்குள் (நவம்பர் 15) சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்துள்ளது.

இதையடுத்து, பல்வேறு அணிகளும் தங்களின் பட்டியலை சமர்பித்து வருகிறது. மினி ஏலத்தில் முக்கியமான வீரர்கள் நேற்றைய உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் நாயகர்களான பென் ஸ்டோக்ஸ், சாம் கரன் ஆகியோர் பெரிய விலைக்கு போவார்கள் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலும் படிக்க | IPL 2023 Mini Auction : சிஎஸ்கே, மும்பை அணிகளின் முழு பட்டியல் - யாருக்கெல்லாம் 'குட் பை'?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News