சாக்ஷி, பி.வி.சிந்து பிரகாசிக்க நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக்

Last Updated : Aug 22, 2016, 01:01 PM IST
சாக்ஷி, பி.வி.சிந்து பிரகாசிக்க நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக் title=

நடந்த 2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 22-ம் தேதி நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தையும், இந்தியா 67-வது இடத்தையும் பிடித்தது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில், ஆகஸ்ட் 22-ம் தேதி துவங்கிய 31-வது ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 22-ம் தேதியான இன்றுடன் நிறைவடைந்தது. ரியோ ஒலிம்பிக்கில் 207 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 15 விளையாட்டு போட்டிகளில், 118 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மரக்கானா மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெறுகிறது.

ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 121 பதக்கத்துடன் முதலிடத்தையும், இரண்டாவதாக 70 பதக்கத்துடன் சீனாவும், 76 பதக்கத்துடன் பிரிட்டன மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

Trending News