இந்தியா - பாகிஸ்தான் உலக கோப்பை லீக் போட்டி ஆக்ரோஷம், ஆர்பரிப்பு என கொண்டாட்டத்துக்கு குறைவில்லாமல் முடிந்திருக்கிறது. கூடவே இந்திய ரசிகர்களின் வரம்பு மீறல் சில சர்ச்சைகளையும் இப்போட்டியில் ஏற்படுத்தியிருக்கிறது. அபாரமாக விளையாடிய இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உலக கோப்பை புள்ளிப்பட்டியலில் இப்போது முதல் இடத்தில் இருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசத்தலான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியதால் ஒன் சைட் மேட்சாகவே இருந்தது. இருப்பினும் இந்திய அணி வெற்றி பெற்றதில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. அந்த கொண்டாட்டத்தில் இப்போது சூடாக இணைந்திருக்கிறது சோயிப் அக்தருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தெண்டுல்கர் கொடுத்திருக்கும் பதிலடி.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு சோயிப் அக்தர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், முன்பு சச்சின் விக்கெட்டை வீழ்த்திய புகைப்படத்தை பகிர்ந்து இதுபோன்று நாளை நடக்குமா? என்று கேட்டிருந்தார். அதாவது இந்திய அணியை பாகிஸ்தான் அணி ரவுண்டு கட்டி அடித்து தோற்கடிக்குமா? என்ற வஞ்ச நோக்கத்தோடு அவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்போது அந்த புகைப்படத்துக்கு தெண்டுல்கர் ஏதும் ரியாக்ட் செய்யவில்லை.
ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியவுடன் டிவிட்டருக்கு சென்ற தெண்டுல்கர் சோயிப் அக்தருக்கு சுடச்சுட பதில் கொடுத்துள்ளார். அந்த பதிலில், நான் கூலாவே இருக்கிறேன் அக்தர் என கூறியுள்ளார். அதாவது, அக்தர் போல் அதிரடி காட்ட நினைத்த பாகிஸ்தான் தோல்வியை தழுவியது, கூலாக இருந்த இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது என்ற பொருளில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்துள்ள சோயிப் அக்தர், நீங்கள் கிரிக்கெட்டின் மிக பெரிய தூதுவர், உங்களின் ஆட்டத்தால் கிரிக்கெட்டை மேன்மைப்படுத்தியுள்ளீர்கள், கிரிக்கெட் களத்துக்கு உள்ளே நம்முடைய போட்டி இருந்தாலும், வெளியே நம் நட்பு தொடர்கிறது என சச்சினின் அந்த டிவிட்டுக்கு பதில் கொடுத்து சரண்டராகிவிட்டார். சச்சினும் அந்த டிவிட்டுக்கு உங்களுக்கும் குடும்பத்துக்கும் வாழ்த்துகள் என விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
மேலும் படிக்க | 'வந்த இடம் என் காடு...' பாகிஸ்தான் தான் பலியாடு - ஆதிக்கத்தை தொடரும் இந்தியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ