இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்வானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு தன்னுடைய கிரிக்கெட் பயணம் குறித்த புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை அவர் நினைவுகூர்ந்துள்ளார். அதில் ஒன்று இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாவதற்கு முன்பே பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டியில் களமிறங்கியதை சச்சின் டெண்டுல்கர் நினைவு கூர்ந்துள்ளார். 1987 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடி இருக்கிறார்.
மேலும் படிக்க | கடைசி சான்ஸ்! ஈஸியா விட்டுட மாட்டோம்! வீரியமாக களமிறங்கும் சீனியர் கிரிக்கெட்டர்கள்
அதாவது, 1989 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அவர் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கி விளையாடி இருக்கிறார். இது தொடர்பாக ‘ப்ளேயிங் இட் மை வே’ (Playing It My Way) என்ற தனது சுயசரிதையில், எழுதியிருகும் சச்சின் டெண்டுல்கர், அந்த சம்பவத்தை விவரித்துள்ளார். 1987 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. மும்பையில் நடந்த இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இம்ரான் கான் இருந்துள்ளார்.
போட்டியின்போது ஜாவித் மியான்டட் மற்றும் அப்துல் காதர் ஆகியோர் பீல்டிங்கில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் அப்போது அங்கிருந்த சச்சின் தெண்டுல்கரை இம்ரான் பீல்டிங் செய்ய வருமாறு அழைத்துள்ளார். அவரும் களமிறங்கி பீல்டிங் செய்திருக்கிறார். " இம்ரான் கான் இதனை நினைவில் வைத்திருப்பாரா என தெரியவில்லை. நான் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கி விளையாடி இருக்கிறேன். இந்திய அணிக்கு சர்வதேச போட்டிக்கு அறிமுகமாவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறேன்" என கூறியுள்ளார்..
மேலும், லாக் ஆன் திசையில் பீல்டிங் இருந்த சச்சின், கபில் தேவ் அடித்த கேட்சை தவற விட்டுவிட்டாராம். மிட் ஆனில் இருந்திருந்தால் நிச்சயம் அந்த கேட்சை பிடித்திருக்க முடியும் என தெரிவித்திருக்கும் சச்சின் பாகிஸ்தானுக்காக கபில்தேவை ஆட்டமிழக்க செய்திருப்பேன் என சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | விராட் கோலி ஒன்னும் சூப்பர் இல்லை, வார்னர் இனி அவ்வளவு தான் - ஆகாஷ் சோப்ரா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ