Rumours: ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு திருமணம் என்ற செய்தி வதந்தியா? உண்மையா?

மார்ச் 12ஆம் தேதி முதல் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 6, 2021, 03:13 PM IST
  • ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு திருமணம்?
  • திருமணச் செய்தி வதந்தியா? உண்மையா?
  • இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரிலும் பும்ரா இல்லை
Rumours: ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு திருமணம் என்ற செய்தி வதந்தியா? உண்மையா? title=

புதுடெல்லி: மார்ச் 12ஆம் தேதி முதல் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களால் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியைத் தவறவிட முடிவு செய்தார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா. இந்திய வேகப்பந்து அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளருக்கு இது மிகவும் தேவையான ஓய்வு. பும்ரா திருமணம் செய்ய ஓய்வு எடுத்தார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

மார்ச் 12 முதல் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  

Also Read | எனது கடினமான தருணங்களில் துணையாக உடன் இருந்தார் Virat Kohli: Glenn Maxwell

முன்னதாக, ஏ.என்.ஐ.யுடன் பேசிய பி.சி.சி.ஐ.யின் வட்டாரங்கள், வேகப்பந்து வீச்சாளர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். திருமணம் தொடர்பான முன்னேற்பாடுகளுக்காகவே அவர் விடுப்பு எடுத்துள்ளனர்.

"அவர் திருமணம் செய்து கொள்வதாக பிசிசிஐக்குத் தெரிவித்தார். வாழ்க்கையின் மிக முக்கியமான நாளுக்கான தயாரிப்புகளுக்காக விடுப்பு எடுத்துள்ளார்" என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

நான்காவது டெஸ்டில், இந்திய அணியில் முகமது சிராஜுக்கு பதிலாக பும்ரா நியமிக்கப்பட்டார். 27 வயதான இவர் சமீபத்திய ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பும்ரா, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

Also Read | ஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை, அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டியவர்!
 
தற்போதைய டெஸ்ட் தொடரில், பும்ரா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார், அதில் அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார், இவை அனைத்தும் முதல் டெஸ்டில் வந்தன. பணிச்சுமை நிர்வாகக் கொள்கையின் ஒரு பகுதியாக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டையும் பும்ரா தவறவிட்டார்.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக இருந்ததால் மூன்றாவது டெஸ்டில், பும்ரா அதிகமாக பந்து வீசவில்லை. ஆனால், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இப்போது திருமண பந்தத்தில் இணைந்து வெற்றி பெறும் முனைப்பில் மூழ்கியிருக்கிறார் பும்ரா.

Also Read | வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய சிவாலயங்கள் எவை?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News