ரோகித் சர்மாவுக்காக காத்திருக்கும் உலக சாதனை

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 13, 2022, 03:35 PM IST
  • ரோகித் சர்மாவுக்காக காத்திருக்கும் உலக சாதனை
  • 20 ஓவர் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடக்க உள்ளார்
  • இந்த சாதனையை படைக்கப்போகும் இந்திய 2வது வீரர்
ரோகித் சர்மாவுக்காக காத்திருக்கும் உலக சாதனை title=

மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி புனேவில் இன்று நடைபெறுகிறது. தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கும் மும்பை அணி இப்போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் 2022 தொடரில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை.

மேலும் படிக்க | ஒரே சிக்ஸரில் உலக சாதனை படைத்த பாண்ட்யா! அந்த சிக்ஸரில் அப்படி என்னதான் ஸ்பெஷல்?!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியாலாவது முதல் வெற்றியை பெறுமா? என மும்பை ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியைக்கூட பெறாத மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலும், 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ள பஞ்சாப் அணி 7வது இடத்திலும் உள்ளன. மும்பை அணிக்காக 5 கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா, இதுவரை சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்ததாதும் மும்பை அணியின் தோல்விக்கு காரணமாக உள்ளது. 

இதனால் அவருடைய ஆட்டம் இன்றைய போட்டியில் கூர்ந்து கவனிக்கப்படும். அவர் சிறப்பாக ஆடும்பட்சத்தில் மும்பை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேநேரத்தில் ரோகித் சர்மாவுக்காக ஒரு சாதனையும் காத்திருக்கிறது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடக்க ரோகித் சர்மாவுக்கு இன்னும் 25 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த ரன்களை இன்றைய போட்டியில் அவர் எடுக்கும்பட்சத்தில், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த 2வது இந்திய வீரர் மற்றும் உலகளவில் 7வது வீரர் என்ற சாதனைகளுக்கு சொந்தக்காரராவார். 

இதற்கு முன்னர் விராட் கோலி ஒருவர் மட்டுமே 10 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார். இதேபோல், ஒரே ஒரு பவுண்டரி அடித்தவுடன் ஐபிஎல் போட்டியில் 500 பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் இணைவார். இதற்கு முன்னர் ஷிகர் தவான், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா ஆகியோர் ஐபிஎல் தொடரில் 500 பவுண்டரிகள் விளாசியுள்ளனர். 

மேலும் படிக்க | நாங்க திரும்பி வந்துடோம்னு சொல்லு! அதிரடி காட்டிய சிஸ்கே!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News