20 ஆண்டுகளாக எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை - கபில்தேவ், கங்குலி உடன் சேர்ந்த ரோகித்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 20 ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டன்கள் யாரும் செய்யாத சாதனையை ரோகித் சர்மா நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் செய்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 13, 2023, 10:15 AM IST
  • ரோகித் சர்மா அசாத்திய சாதனை
  • 20 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது
  • உலக கோப்பையில் எடுத்த முதல் விக்கெட்
20 ஆண்டுகளாக எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை - கபில்தேவ், கங்குலி உடன் சேர்ந்த ரோகித் title=

நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் கடைசி லீக் போட்டி, இந்திய வீரர்களின் சாதனைகளை படைக்கும் போட்டியாக அமைந்தது. கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் தொடங்கி வைத்த ரெக்கார்டு அவருடைய பந்துவீச்சிலும் தொடர்ந்தது. குறிப்பாக 20 ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டன்கள் யாரும் செய்யாத சாதனையை அவர் செய்துள்ளார். அது என்னவென்றால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 20 ஆண்டுகளாக எந்த இந்திய அணியின் கேப்டனும் விக்கெட் எடுக்கவில்லை. கடைசியாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்கள் வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அவருக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற யாரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் பந்துவீசி விக்கெட் எடுக்கவில்லை.

மேலும் படிக்க | 400 ரன்களை குவித்த இந்தியா - ராகுல், ஸ்ரேயாஸ் சதம் ... நெதர்லாந்து பவுலரும் சதம்..!

அந்த சாதனையை நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா படைத்துளார். நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகள் இழந்திருந்தபோது பந்துவீச வந்த அவர் அந்த அணியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த தேஜா நிதமனுரு விக்கெட்டை எடுத்தார். 5 பந்துகள் மட்டுமே வீசிய ரோகித் சர்மா ஓவரில் அவர் ஒரு சிக்சர் அடித்த முடித்தவுடன் அடுத்த பந்தையும் சிக்சருக்கு அடிக்க முற்பட்டார். ஆனால்  லாங் ஆன் திசையில் நின்று கொண்டிருந்த முகமது ஷமி ஈஸியாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இதன் மூலம் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 12 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். 

கடைசியாக 2012 ஆம் ஆண்டு மெல்பேர்ன் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பந்துவீசி ரோகித் சர்மா விக்கெட் எடுத்தார்.  அதன்பிறகு சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு பந்துவீசி ஒரு ஓவர் முடிவதற்குள்ளாகவே விக்கெட் எடுத்து அசத்தியிருக்கிறார் ரோகித் சர்மா. அத்துடன் இந்திய அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பை தொடரில் விக்கெட் எடுத்த ஜாம்பவான்களான கபில்தேவ் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரின் பட்டியலிலும் தன்னுடைய பெயரை இணைத்துக் கொண்டுள்ளார். 

இதில் வேடிக்கையான அம்சம் என்னவென்றால் உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இருக்கும் முகமது ஷமிக்கு நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. மேலும், இந்திய அணியில் விக்கெட் கீப்பரை தவிரை மற்ற அனைவரும் நேற்று பந்துவீசினர். இது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசும்போது, இதனை முன்பே முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்தோம், ஆனால் எங்களுக்கான சூழல் அமையவில்லை. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியை எங்களின் திறமையை பரிசோதிக்க பயன்படுத்திக் கொண்டோம் என கூறினார். 

மேலும் படிக்க | உலககோப்பை அரையிறுதிப் போட்டி: நீங்கள் கேள்விப்படாத 8 சுவாரஸ்யங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News