இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக ரிஷப் பந்த் கொடுத்த முக்கிய அறிக்கை!

ஆசிய கோப்பை 2022 இந்தியா vs பாகிஸ்தான்: இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் விமர்சகர்கள் பற்றிய தனது கருத்துக்களைத் பேசியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Sep 4, 2022, 07:47 AM IST
  • இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகிறது.
  • சூப்பர் 4 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
  • முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக ரிஷப் பந்த் கொடுத்த முக்கிய அறிக்கை! title=

இந்திய அணி ஆசியக் கோப்பை 2022-ல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  குரூப் சுற்றில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.  2 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முதல் ஆளாக தகுதி பெற்றது.  ஹாங்காங் அணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டது.  ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி, சூப்பர் 4 தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்கிறது.  இலங்கை, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் என நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.  

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அணியில் இடம் பெறவில்லை.  அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றார்.  இது சர்ச்சையை ஏற்படுத்தியது.  தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்திக்கிறது என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.  இந்நிலையில், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனக்கு எதிராக வந்த விமர்சனங்கள் பற்றி பேசியுள்ளார்.  "நான் ஒரு இன்னிங்ஸில் சதம் எடுத்தாலும், அடுத்த ஒரு இன்னிங்ஸில் மலிவாக அவுட்டானாலும் கடுமையான விமர்சனங்கள் இருக்கும் என்பதை நான் பழகிவிட்டேன்," என்று பந்த் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | கே.எல். ராகுலை நீக்க சொல்கிறீர்களா?... பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட சூர்யகுமார் யாதவ்

இந்திய அணி இன்று (ஞாயிற்றுக்கிழமை - செப்டம்பர் 3) ஆசிய கோப்பை 2022-ல் மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இதில் போட்டியின் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி பழி தீர்க்க தயாராகி வருகிறது.  இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஹாங்காங்கிற்கு எதிரான மோதலில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது.  ஹாங்காங் அணியை வெறும் 38 ரன்களில் ஆல் அவுட் செய்து இருந்தது.  

மேலும் படிக்க | ஆல்ரவுண்டர்கள் தரவரிசை - டாப் 5ல் ஹர்திக் பாண்டியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News