இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரராக இருக்கும் ரிஷப் பந்த், டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் என மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறார். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் அவர், ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, காபா டெஸ்ட் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டிக்குப் பிறகு, சிறந்த பினிஷர் என்ற அந்தஸ்தும் அவருக்கு கிடைத்தது.
ALSO READ | ரஹானேவுக்கு ’செக்’ வைத்த கே.எல்.ராகுல்..!
புகழ் வெளிச்சத்தில் இருக்கும் ரிஷப் பந்துக்கு இன்னொரு மகுடம் கிடைத்துள்ளது. அதாவது, அவரின் சொந்த மாநிலமான உத்தரக்காண்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர்களிடையே விளையாட்டையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிப்பதற்காக அவர் அம்மாநில தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். ரிஷப் பந்த் தற்போது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியுடன் உள்ளார்.
இதற்கு முன்பாக உத்தரக்காண்ட் அசு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திரமான வந்தனா கட்டாரியாவை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாட்டு துறையின் தூதுவராக அம்மாநில அரசு நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரபலமான இரண்டு முகங்கள் மாநில அரசின் தூதுவராக செயல்படுவதால், அம்மாநிலத்தில் இளைஞர்களிடையே விளையாட்டு தொடர்பான ஆர்வம் மேலோங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | ’இந்த 3 நாள்....’ இந்திய வீரர்களுக்கு டிராவிட் சொன்ன முக்கிய அறிவுரை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR