வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்குப் பிறகு இந்தியா வரும் இலங்கை அணி, 3 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி முதல் டி20 போட்டி பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த 2 போட்டிகள் முறையே பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.
மேலும் படிக்க | பெங்களூரு அணியின் புதிய கேப்டன்..! இவரா?
20 ஓவர் போட்டிகள் அனைத்தும் லக்னோ மற்றும் தர்மசாலா மைதானங்களில் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி, இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ விரைவில் வெளியிட உள்ளது. அதில், விராட் கோலிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் அவருக்கு, இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ரவீந்தர் ஜடேஜா இலங்கை தொடரில் இருந்து இந்திய அணிக்கு திரும்ப உள்ளது. ரோகித் சர்மா இந்திய அணியின் முழு நேர டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பும், அணி வீரர்கள் அறிவிப்புக்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்தியா வரும் இலங்கை அணி, டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக இருந்தது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு முதலில் 20 ஓவர் போட்டி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR