ஐபில் தொடரில் நேற்று நடந்த 28வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையில் மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல். ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் களமிறங்கனர்.
பஞ்சாப் அணியின் தொடக்கம் நன்றாக இருந்தாலும், இடையில் விக்கெட் சரிந்தது. ஆனாலும் மறுபுறத்தில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். அதில் 5 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கும். 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது புஞ்சன் அணி.
பெங்களுர் அணி தரப்பில் சஹால் 2 விக்கெட்டும், சிராஜ், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இதனையடுத்து, 174 ரன்கள் எடுத்தல் வெற்றி பெற்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களுர் அணி, ஆரம்ப முதலே அதிரடி காட்டியது. அணியின் ஸ்கோர் 43 ரன்கள் இருந்த போது பார்த்திவ் படேல் 19(9) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த ஏபி டி வில்லியர்ஸ், கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து அணியை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இருவரும் அரைசதம் அடித்தனர். விராட் கோஹ்லி 67(53) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து மார்கஸ் ஸ்டோனெனிஸ் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் இணைத்து அதிரடியாக ஆடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஏபி டி வில்லியர்ஸ் 59(38) ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 28(16) ரன்களும் எடுத்தனர்.
இந்த ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணியை நேற்றைய போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வேற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. முகம்மது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
ஆட்டநாயகனாக ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.