KKR v KXIP: டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு

2019 தொடரின் 52-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதுகின்றன!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 3, 2019, 07:59 PM IST
KKR v KXIP: டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு தேர்வு title=

19:33 03-05-2019
இன்று மொஹாலியில் நடைபெற உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதும் ஆட்டத்தில் கொல்கத்தா அணி டாஸ் வென்றது. இதனையடுத்து முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

 


மொஹாலி: IPL 2019 தொடரின் 52-வது லீக் ஆட்டம் இன்று மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

புள்ளி பட்டியலில் இரண்டு அணிகளும் 10 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் கொல்கத்தா அணியும், 7-வது இடத்தில் பஞ்சாப் அணியும் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு ஃப்ளா-ஆப் சுற்றுக்கு செல்ல ஒரு கடைசி வாய்ப்பு கிடைக்கும். இந்த இரண்டு அணிகளுக்கும் இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. மற்ற அணிகளுக்கு ஒரே ஒரு லீக் போட்டி தான் இருக்கிறது. 

அதுவும் நாளை 8 மணிக்கு நடைபெறும் ஹைதரபாத் - பெங்களுரு அணிக்களுக்கிடையிலான போட்டியில் ஹைதரபாத் தோல்வி அடைந்தால், இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த இரண்டு அணிகளில் எந்த அணி தொடர்ந்து இரண்டு லீக் போட்டியிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறதோ, அந்த அணிக்கு ஃப்ளா-ஆப் சுற்றுக்கு செல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

எனவே இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கிய போட்டியாகும். அடுத்த சுற்றுக்கு செல்ல இந்த போட்டி ஒரு வாய்ப்பாக இருப்பதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கிடையே போட்டி கடுமையாக இருக்கும்.

இன்றைய போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

Trending News