பாகிஸ்தான் பந்துவீச்சாளரை வெளுத்து வாங்கிய புஜாரா - சிக்சர் வீடியோ

கவுண்டி கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பந்துவீச்சாளரை புஜாரா விளாசிய வீடியோ வைரலாகியுள்ளது

Written by - S.Karthikeyan | Last Updated : May 8, 2022, 11:36 AM IST
  • கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடும் புஜாரா
  • சிக்சர் மற்றும் சதங்களாக விளாசி அசத்தல்
  • இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு பிரகாசம்
பாகிஸ்தான் பந்துவீச்சாளரை வெளுத்து வாங்கிய புஜாரா - சிக்சர் வீடியோ  title=

இந்திய டெஸ்ட் அணியின் நம்பகமான பேட்ஸ்மேனாகக் கருதப்படும் சேட்டேஷ்வர் புஜாரா, தற்போது இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். செம ஃபார்மில் இருக்கும் புஜாரா இரட்டை சதம் மற்றும் சதம் என விளாசிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, பாகிஸ்தானின் முன்னணி பந்துவீச்சாளரான சாஹின் அப்ரிடி பந்துவீச்சில் சிக்சர் அடித்த  வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. 

மிடில்செக்ஸ் அணி

இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் செட்டேஷ்வர் புஜாரா மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக 4வது போட்டியில் விளையாடுகிறார். இந்த போட்டியில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியை, சேதேஷ்வர் புஜாரா எதிர்கொண்டார். புயல் வேகம் மற்றும் துல்லியமான பந்துவீச்சுக்கு பெயர் பெற்ற ஷாகின் அப்ரிடியை புஜாரா எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவரை சிறப்பாக எதிர்கொண்ட புஜாரா, அப்பர் கட்டில் சிக்சரை விளாசி ஆச்சர்யப்படுத்தினார். 

புஜாரா நான்காவது சதம்

முதல் இன்னிங்ஸில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்த புஜாரா, இரண்டாவது இன்னிங்ஸில் நங்கூரம்போல் நிலைத்து நின்று விளையாடினார். இதனால், ஆட்டநேர முடிவில் விக்கெட் இழக்காமல் 125 ரன்கள் எடுத்தார். கவுண்டி கிரிக்கெட்டில் இது புஜாராவுக்கு நான்காவது சதமாகும். ஏற்கனவே இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் ஒரு சதம் விளாசியிருந்தார். புஜாரா ஃபார்ம்முக்கு திரும்பியிருப்பதால், அவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

மேலும் படிக்க | தோல்விக்காக விளையாடிய கொல்கத்தா - லக்னோ மீண்டும் கிளாசிக் வெற்றி

ஃபார்ம் அவுட்டில் விமர்சனம்

கடந்த சில ஆண்டுகளாக ஃபார்ம் அவுட்டில் தத்தளித்த அவர், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதன்மூலம் புஜாராவின் டெஸ்ட் வாய்ப்பு என்பது கேள்விக்குறி என கூறப்பட்டது. இந்திய அணியின் கேப்டன்களும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும், ஆனால் புஜாராவுக்கான வாய்ப்பு பற்றி நிச்சயமாக கூற முடியாது என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தன்னுடைய பேட்டிங் மூலம் தேர்வர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் புஜாரா. இங்கிலாந்து அணிக்கு எதிராக நிலுவையில் இருக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிக்கு திரும்பும் கிறிஸ் கெயில் - 2 அணிகளுக்கு ஆட விருப்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News