உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் மிகப்பிரம்மாண்டமாக மார்ச் 26 ஆம் தேதி மும்பை வான்கடேவில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் 10 நாள் பயிற்சி பெறுமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. இதனால் 25 இந்திய வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியில் கலந்து கொண்டனர். இதில் வீரர்களின் உடல் தகுதி சரிபார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் பிரபல இளம் வீரர் இந்த டெஸ்டில் தோல்வியடைந்துள்ளார்.
மேலும் படிக்க | IPL2022: இந்த ஆண்டு ஐ.பி.எலுக்கு 'No' சொன்ன ஸ்டார் பிளேயர்ஸ்..!
யார் அந்த வீரர்?
மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனும், டெல்லி கேப்பிடல்ஸ் பேட்ஸ்மேனுமான பிரித்வி ஷா தான் அந்த வீரர். யோ-யோ டெஸ்டில் பங்கேற்ற அவர் தோல்வியடைதுள்ளார். இருப்பினும், அவர் ஐபிஎல் 2022ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. சில காலமாக மோசமான ஃபார்ம் மற்றும் பிட்னஸைக் கொண்டிருக்கும் பிரித்திவி ஷா, இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே அவருக்கான நிரந்தர இடம் என்பது இல்லை. அவ்வப்போது வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தநிலையில், யோயோ டெஸ்ட் தோல்விக்குப் பிறகு, இனி வரும் போட்டிகளுக்கு அவருடைய பெயர் பரிசீலனையில் கூட இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா
PTI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிருத்வி ஷா யோ-யோ டெஸ்டில் 15 மதிப்பெண்களை பெற்றுள்ளார். ஆனால், அந்த டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 16.5 மதிப்பெண்களை ஒரு வீரர் பெற வேண்டும். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் யோயோ டெஸ்டில் பங்கேற்றார். அவர் 17 புள்ளிகள் பெற்று இந்த சோதனையில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், பந்துவீச்சு பயிற்சி அவருக்கு கட்டாயமாக இருக்கவில்லை என்றாலும், 135 கிலோ மீட்டர் வேகத்தில் சில ஓவர்களையும் ஹர்திக் பாண்டியா வீசியுள்ளார்.
மேலும் படிக்க | IPL2022: தோனி விரைவில் வெளியிடப்போகும் அறிவிப்பு இதுதான்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR