நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசி வரை வெற்றிக்காக போராடிய இந்திய அணி வீரர்களின் போராட்ட குணம் பாராட்டத்தக்கது என பிரதமர் மோடி வாழ்த்து!!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. மழையின் காரணமாக நேற்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்றைக்கு (புதன் கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது.
இதையடுத்து 240 என்ற எளிய இலக்கை எட்டிப்பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து அரையிறுதியோடு வெளியேறியது.
Greetings to everyone, especially the people of Tripura on the start of the auspicious Kharchi Pooja.
May Chaturdash Devata bless everyone with happiness, good health and prosperity.
— Narendra Modi (@narendramodi) July 10, 2019
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணியை பாராட்டியுள்ளார். அதில் இது ஒரு ஏமாற்றமளிக்கும் முடிவு, ஆனால் டீம் இந்தியாவின் கடைவரை போராடும் தன்மை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சு, அனைத்திலும் சிறப்பாகவே செயல்பட்டனர், அதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். வெற்றிகளும் இழப்புகளும் வாழ்க்கையின் ஒரு பகுதி. அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.