இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 12-ஆம் நபரின் குறுக்கீட்டால் சிறுது நேரம் தடைப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நாட்டில் அதிகளவு ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக நடைப்பெற்ற போட்டிகளில் ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து வீரர்களின் கைகுலுக்கி, செல்பி கிளிக் செய்வது போன்ற காட்சிகளை நாம் கண்டிருப்போம்.
ஆனால் இன்று சென்னை மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியில் ஒரு ஆச்சரியமான ரசிகர் ஆடுகளத்தை ஆக்கிரமித்தார், இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. போட்டியை இடைநிறுத்திய இந்த ஆச்சரிய விருந்தினர் யார் தெரியுமா?... ஒரு கருப்பு நாய்!... ஆம் ஒரு நாய் குட்டி இன்றைய போட்டியினை இடைநிறுத்தியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் டி20 தொடரினை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது.
DND#INDvWI pic.twitter.com/3JADfscGyd
— Yadneshkene (@Yadneshkene1) December 15, 2019
இத்தொடரின் முதல் ஆட்டம் இன்று சென்னை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சினை தேர்வு செய்ய, இந்திய வீரர்கள் முதலில் பேட்டிங் செய்தனர். டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷாப் பந்த் ஆகியோர் இந்தியாவை நிலை நிறுத்தினர். அப்போது ஒரு கருப்பு நாய் மைதானத்தினுள் நுழைந்தது, ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தை தன் பக்கம் ஈர்த்தது.
இந்த சம்பவம் 26-வது ஓவரின் தொடக்கத்தில் நடந்தது. மேற்கிந்திய வீரர் சீமர் கீமோ பால் பந்தை வைத்திருந்தார், அவர் ஐயருடன் ஸ்ட்ரைக்கில் ரன்-அப் எடுக்கவிருந்தார். அப்போது நாய் குட்டி மைதானத்திற்குள் நுழைய ஆட்டம் சற்றே தடைபட்டது. கள ஊழியர்கள் நாயைப் பிடிக்க முயன்றபோது, அது வேகமாக தப்பி செல்ல முயன்றது. பின்னர் யார் கையிலும் அகப்படாமல் தப்பிச்சென்றது.
நாய் குட்டி, சிறிது நேரம் எல்லைக் கயிறுகளைச் சுற்றி ஓடியது, பின்னர் மீண்டும் களத்திற்குள் நுழைந்தது. மேற்கிந்திய வீரர் நாய் குட்டியை பிடிக்க முயன்றார், ஆனால் அது தப்பிவிட்டது. அந்த நேரத்தில் வர்ணனை கடமைகளில் இருந்த முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் “களத்தில் 12-வது மனிதர். களத்தில் 12-வது மனிதன்.” என குரல் எழுப்பி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.