ஐபிஎல் 2024: ’சரவெடி காத்திருக்கிறது’ ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு மெசேஜ்

Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக முதன்முறையாக பேசியிருக்கும் ஹர்திக் பாண்டியா, 2015ஆம் ஆண்டை எப்போதும் என்னால் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 6, 2024, 10:40 AM IST
  • மும்பை அணிக்கு வந்ததில் மகிழ்ச்சி
  • ரசிகர்கள் ஆதரவு எனக்கு தேவை
  • சரவெடி உங்களுக்கு காத்திருக்கிறது என பாண்டியா உறுதி
ஐபிஎல் 2024: ’சரவெடி காத்திருக்கிறது’ ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு மெசேஜ் title=

ஐபிஎல் 2024-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்க இருக்கிறார். மும்பை இந்தின்ஸ் அணிக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியிருக்கும் அவர், மும்பை அணிக்காக புதிய அவதாரத்தில் களமிறங்க இருக்கிறார். இவரது தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று சாதனை படைத்ததுடன், அடுத்த ஆண்டும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணி, தங்கத்தை விட்டுட்டோமே என நினைத்து, அவரை பெரும் முயற்சிக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அழைத்து வந்துள்ளது.\

மேலும் படிக்க | காயத்தில் இருந்து விடுதலை ஆன முக்கிய வீரர்... மும்பை இந்தியன்ஸ் அணி ஹேப்பி!

அத்துடன் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பைகளை வென்றபோது கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிடம் இருந்து அந்த கேப்டன் பொறுப்பையும் பறித்து ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்துவிட்டனர். அந்தளவுக்கு ரோகித்தை விட பாண்டியாவுக்கு இந்த ஆண்டு மும்பை அணி மும்பை கொடுத்து பெரும் பொறுப்பையும் ஒப்படைத்திருக்கிறது. இதுகுறித்து முதன்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பேசியிருக்கிறார் ஹர்திக் பாண்டியா. அவர் பேசும்போது, " மீண்டும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களின் அன்பைப் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். எனது கிரிக்கெட் வாழ்க்கை இங்குதான் தொடங்கியது. இந்த நகரம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. 

குஜராத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் பரோடாவிலிருந்து இங்கு வந்தான். இந்த நகரம் அந்த சிறுவனாகிய எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. இதற்கு முன்பு நான் இங்கு இருந்தேன். இரண்டு வருடங்கள் சென்றிருந்தேன். இப்போது மீண்டும் வீட்டுக்கு திரும்பியுள்ளேன்" என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். மேலும், மும்பை அணியின் ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியையும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "என்னை வெற்றிப் பாதைக்கு தள்ள எனது ரசிகர்களிடமிருந்தும் அதே ஆதரவு தேவை. உறுதியாக இருங்கள், ரசிகர்களுக்கு உற்சாகமான சீசனைக் கொண்டு வர முயற்சிப்பேன். நாம் அனைவரும் சேர்ந்து ரசிக்கக்கூடிய பயணம் இது" என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

"ஐபிஎல் 2015 எனக்கு மிகவும் முக்கியமானது. அந்த ஆண்டு ஐபிஎல் தொடரை என்னால் எப்போதும் மறக்க முடியாது. அந்த ஐபிஎல் சீசன் என் வாழ்க்கையை மாற்றியது. அந்த சீசனில் நாக் அவுட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பங்களிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக என் கேரியரில் அதுவே சிறந்த சந்தர்ப்பம். நாக் அவுட் சுற்றில் இரண்டு முறை ஆட்ட நாயகன் விருதை வென்றது எனக்கும் சிறப்பான அனுபவம்" என மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | IPL 2024: சென்னை வந்த தல... ஓப்பனிங்கில் இறங்குகிறாரா தோனி - புதிய பிளான் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News