பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஜாவித் மியாண்டட் (Javed Miandad) புதன்கிழமையன்று, தான் தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கேப்டனாக இருந்துள்ளதாகவும், அவருக்கு சவாலாக அரசியலில் இறங்க தயாராக இருப்பதாகவும் கூறினார். மியாண்டட் தனது யூடியூப் சேனலில் முன்னாள் கேப்டனான இம்ரான் கானுக்கு கிரிக்கெட்டில் தான் ஒரு உந்துசக்தியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மியாண்டட் தான் அரசியலில் கண்டிப்பாக இறங்கப்போவதாகவும், அதன் பிறகு மக்களுக்கு உண்மையான அரசியல் என்றால் என்ன என்பது பற்றி தெரிய வரும் என்றும் கூறினார். அரசியலில் சேர்ந்த பிறகு தான் எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல், நேர்மையான முறையில் நடந்து கொள்வதை மக்கள் பார்ப்பார்கள் என்றார் அவர்.
"விளையாட்டு விவகாரங்களில் மட்டுமல்ல, அரசியல் துறையிலும் நான் இம்ரான் கானுக்கு (Imran Khan) சவால் விடுவேன். நான் அவருடைய கேப்டனாக இருந்தவன் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் கோபமான தொனியில் கூறினார்.
தான்தான் இம்ரான் கானை பிரதமராக்கியதாகவும் மியாண்டட் கூறினார். கான் சரியான பாதையை மறந்துவிட்டார் என்றும் அவர் நாட்டை சரியாக நடத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் (PCB) கான் செய்துள்ள நியமனங்கள் கேள்விக்குரியாக உள்ளன என்றும் அவர் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
பாகிஸ்தான் (Pakistan) மக்கள் PCB-யை நிர்வகிக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் வெளிநாட்டிலிருந்து மக்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என்றும் மியாண்டட் தெரிவித்தார்.
ALSO READ: “கோவமடைந்து பீமர் போட்டேன், பின்னர் தோனியிடம் மன்னிப்புக் கேட்டேன்” ஒப்புக்கொண்ட அக்தர்!!
"தயவுசெய்து நம் நாட்டில் கிரிக்கெட்டை நிர்வகிக்க வெளிநாட்டிலிருந்து மக்களை அழைத்து வர வேண்டாம். பாகிஸ்தானில் தகுதியானவர்களைத் தேடுங்கள். பாகிஸ்தான் மக்களை நம்புங்கள்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய பிராந்திய கிரிக்கெட் முறை குறித்து பேசிய அவர், முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது நடத்தப்பட்ட விதம் சரியல்ல என்றும் கூறினார்.
1992 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினரான மியாண்டட், அப்போதைய பாகிஸ்தான் அணியின் முதுகெலும்பாக இருந்தார். மேலும் பல மறக்கமுடியாத இன்னிங்ஸ்களுக்காக அவர் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ளார்.
ALSO READ: 'ஜெய் ஸ்ரீ ராம்,' என்று தெரிவித்த பாகிஸ்தானின் இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்....'