இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பில்லை...? - வேகத்திற்கு இனி வேற வீரர் தான்!

Indian Cricket Team: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் சோபிக்காத நிலையில், அவர் மீண்டும் அணியில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 14, 2023, 05:24 PM IST
  • இந்தியா அடுத்து அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது.
  • அதன்பின், ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை விளையாடுகிறது.
  • உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தற்போது தயாராகி வருகிறது.
இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பில்லை...? - வேகத்திற்கு இனி வேற வீரர் தான்! title=

Indian Cricket Team: இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை நேற்றோடு நிறைவு செய்தது. அடுத்து, அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளை இந்தியா விளையாட உள்ளது. ஆக. 18, 20, 23 ஆகிய தேதிகளில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் ரோஹித், விராட், பாண்டியா என முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பும்ரா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். 

அதன்பின் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரிலும், இந்தியாவில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. குறிப்பாக, இந்த தொடர்களும் ஒருநாள் வடிவத்தில் விளையாடப்படுவது, அடுத்து அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கான மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. 

உலகக்கோப்பைக்கு பிளேயிங் லெவனை திட்டமிடுவதிலும், ஸ்குவாடை வலிமைப்படுத்துவதிலும் பல்வேறு பார்முலாவில் வீரர்களை பயன்படுத்தும் நெகிழ்வுதன்மையிலான அணுகுமுறைக்கும் இந்த இரண்டு தொடர்கள் முக்கிய பங்கு வகிக்கும். இதுவரை ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படாத நிலையில், மேற்கு இந்திய தீவுகள் உடனான 3 ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களே அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. 

மேலும் படிக்க | குல்தீப் யாதவ் மறுபிரவேசம்: அந்த பிளேயருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறார் - அபினவ் முகுந்த்

எப்போது முடியும் பரிசோதனை?

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியிருந்தது. அந்த தொடரில், இந்திய அணி தனது பிளேயிங் லெவனை முழுமையாக்க பல்வேறு பரிசோதனை முயற்சிகளில் இறங்கியது. ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களின் இடங்களை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதில், ருதுராஜை தவிர்த்து மற்ற மூன்று பேருக்கும் தான் உலகக்கோப்பை தொடரின் இந்திய ஸ்குவாடில் இடம்பிடிக்க அதிக போட்டி இருக்கும். நடந்து முடிந்த டி20 தொடரை வைத்து பார்த்தால், இந்த போட்டியில் திலக் வர்மாவும் இணைந்துகொள்வாரோ எனவும் கூறப்படுகிறது. 

ஆசிய கோப்பையில் உம்ரான்?

பேட்டிங் ஒருபுறம் இருக்க, பந்துவீச்சிலும் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஷமி, சிராஜ் ஆகியோர் ஓய்வில் இருந்து அணிக்கு ஆசிய கோப்பையில் திரும்பி வர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பும்ராவும் அணிக்கு திரும்பியுள்ளார். எனவே, ஸ்குவாடை வலிமைப்படுத்த மற்றொரு பலமான வேகப்பந்துவீச்சாளரை இந்தியா கண்டறிய வேண்டும். இந்த இடம் முன்பு உம்ரான் மாலிக்கிற்கு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவரின் பங்களிப்பு இதில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பந்துவீசவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் உம்ரான் மாலிக்கால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. அதன் பிறகு, மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஹர்திக் பாண்டியா உம்ரான் மாலிக்கை பிளேயிங் லெவனில் இருந்து வெளியே வைத்தார். உம்ரான் மாலிக் அடுத்த டி20 தொடரிலும் இருந்தார், ஆனால் ஹர்திக் பாண்டியா அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பளிக்கவில்லை என்பது நினைவுக்கூரத்தக்கது. 

சொபிக்கத் தவறினார்

எதிர்வரும் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்படவில்லை. அத்தகைய சூழ்நிலையில், அவர் ஆசிய கோப்பை 2023இல் இந்திய அணியில் இடம்பெறலாம் என்று கூறப்பட்டது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் அவரது மோசமான செயல்திறன் மீண்டும் இந்திய அணியில் இருந்து வெளியேறும் வழியைக் காட்டலாம். உம்ரான் மாலிக் சில காலமாக தனது முத்திரையை பதிக்க தவறிவிட்டார். 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் பெரிதாக சோபிக்கவில்லை.  

உம்ரான் மாலிக் கடந்த ஆண்டு டி20 மூலம் சர்வதேச அரங்கில் அறிமுகமானார், பின்னர் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அவர் 2022ஆம் ஆண்டு நவம்பரில், நியூசிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியையும் விளையாடினார். உம்ரான் இதுவரை 10 ஒருநாள் மற்றும் 8 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். உம்ரான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2023: பங்கேற்கும் அணிகள் மற்றும் வீரர்களின் முழு விவரம்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News