INDvsNZ: 5-வது ஒருநாள்; 252 ரன்களுக்கு இந்தியா All-Out!

இன்று இந்திய - நியூசிலாந்து அணிகள் ,மோதும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடு வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 3, 2019, 11:04 AM IST
INDvsNZ: 5-வது ஒருநாள்; 252 ரன்களுக்கு இந்தியா All-Out! title=

10:58 AM 03-02-2019

ஆட்டத்தின் 49.5-வது பந்தில் 10-வது விக்கெட்டை இழந்தது இந்தியா, ஆட்ட நேர முடிவில் இந்தியா 252 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்குகிறது. 


10:51 AM 03-02-2019

49-வது ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்துள்ளது. புவனேஷ்வர் குமார் 3(5), மொகமது ஷமி 0(0) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


10:01 03-02-2019
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னால் கேப்டன் எம்.எஸ். தோனி 6 பந்துக்கு ஒரு ரன்கள் எடுத்து ஃபோல்ட் ஆனார். இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. 


09:43 03-02-2019
விஜய் சங்கர் 45(64) ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன்-அவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் இந்தியா நான்காவது விக்கெட்டை இழந்துள்ளது. தற்போது எம்.எஸ்.தோனி வந்துள்ளார். 


09:06 03-02-2019
22 ஓவர் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.


07:07 03-02-2019

இந்திய - நியூசிலாந்து அணிகள் மூதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இந்திய களம் காண உள்ளது.

 

 

 


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளது. அதில் கடந்த 23 ஆம் தேதி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், கடந்த 26 ஆம் தேதி மவுண்ட் மன்கன்யில் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாது ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்திலும், கடந்த 28 ஆம் தேதி அதே மவுண்ட் மன்கன்யில் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதால் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி. இதனையடுத்து கடந்த 31 ஆம் தேதி ஹாமில்டன் செடான் பார்க்கில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி வெற்றி பெற்றது. 

இதன்மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய - நியூசிலாந்து உள்ளது. இந்தநிலையில், இன்று கடைசி ஒருநாள் போட்டியான ஐந்தாவது ஆட்டம் வெலிங்டன் வெஸ்ட்பாக் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நான்காவது போட்டியில் படுதோல்வியை தழுவியது. இதனால் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் வேண்டும் என்ற கட்டாயத்தில் ரோகித் சர்மா உள்ளார். மறுபுறத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கும் மீண்டும் ஒரு பெரிய அடி கொடுக்க காத்திருக்கிறது.

இன்றைய போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்கும். எம்.எஸ். தோனி இன்றைய போட்டியில் ஆட உள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்ப்படுத்தி உள்ளது.

Trending News