INDvsNZ 4வது போட்டி: வெற்றி பாதையில் இந்திய அணியை வழிநடத்துவாரா? ரோஹித் சர்மா

நாளை இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி ஹாமில்டன் செடான் பார்க்கில் நாளை நடைபெற்ற உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 30, 2019, 08:24 PM IST
INDvsNZ 4வது போட்டி: வெற்றி பாதையில் இந்திய அணியை வழிநடத்துவாரா? ரோஹித் சர்மா title=

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ளது. அதில் கடந்த 23 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. கடந்த 26 ஆம் தேதி இரண்டாது ஒருநாள் போட்டி மவுண்ட் மன்கன்யில் மைதானத்தில் நடைபெற்றது. அதில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கடந்த 28 ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி அதே மவுண்ட் மன்கன்யில் மைதானத்தில் நடைபெற்றது. அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதால் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.

இந்தநிலையில், நாளை இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி ஹாமில்டன் செடான் பார்க்கில் நாளை நடைபெற்ற உள்ளது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தனது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்து உள்ளதால், அடுத்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தங்கள் மீதான விமர்சனத்தை காப்பாற்றிக்கொள்ள கடுமையாக போராடும் என்றே தெரிகிறது. 

இந்தியாவை பொருத்தவரை நியூசிலாந்து அணியுடனான கடைசி இரண்டு போட்டிகள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கேப்டன் பொறுப்பை இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஏற்கிறார். கோலி இல்லாத இந்திய அணியை வழிநடத்தி செல்லும் ரோஹித் சர்மா தொடர்ந்து வெற்றி பாதையில் இந்திய அணியை அழைத்து செல்வாரா? என்று நாளை தெரிந்துவிடும். 

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி நாளை காலை 7.30 மணிக்கு தொடங்கும். 

Trending News