சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி; தொடரை வென்றது இந்தியா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் த்ரில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 தொடரை வென்றது இந்தியா!

Last Updated : Jan 29, 2020, 04:46 PM IST
சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி; தொடரை வென்றது இந்தியா! title=

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் த்ரில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 தொடரை வென்றது இந்தியா!

நிசிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டன் செட்டன் பார்க் மைதானத்தில் நடைப்பெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்ககு 179 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 65 ரன்கள் குவித்தார். இவருக்கு அடுத்தப்படியாக விராட் கோலி 38(27) ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்த அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார்ரர் மார்டின் குப்டில் 31(21) ரன்களிலும், கொளின் முன்றோ 14(16) ரன்களிலும் வெளியேற அணித்தலைவர் கேன் வில்லயம்சன் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார். எனினும் இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற அணியின் எண்ணிக்கை 179-ல் நின்றது. நியூசிலாந்த அணிக்கு ஒதுக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவிக்கப்பட்ட நிலையில் போட்டி சமநிலையில் நின்றது.

இதனையடுத்து சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் பணி துவங்கியது. இம்முறை முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பூம்ரா வீசிய 6 பந்துகளில் 17 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கியது.

கே.எல் ராகுல் மற்றும் ரோகித்சர்மா இந்திய அணிக்காக களமிறங்கினர். துவக்கத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இறுதி இரண்டு பந்தில் இரண்டு சிக்ஸர்களை அடித்து ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரினை 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு காரணமாய் அமைந்த ரோகித் சர்மாகவுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

Trending News