IND vs AUS: இவர்கள் இல்லாததது இந்திய அணிக்கு பலவீனம்.. ஆஸ்திரேலியாவுக்கே வாய்ப்பு: பிரபல வீரர் கணிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலவீனம் என பிரபல கிரிக்கெட் வீரரான இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 22, 2023, 04:05 PM IST
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
  • ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு
  • பிரபல கிரிக்கெட் வீரர் வெளியிட்டிருக்கும் கணிப்பு
IND vs AUS: இவர்கள் இல்லாததது இந்திய அணிக்கு பலவீனம்.. ஆஸ்திரேலியாவுக்கே வாய்ப்பு: பிரபல வீரர் கணிப்பு  title=

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதுகின்றன. ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள கென்னிங்டன் ஓவல் (லண்டன்) மைதானத்தில் தொடங்கும் இந்தப் போட்டி ஜூன் 11 வரை நடைபெறும். காயம் அடைந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் இல்லாதது இந்திய அணி பெரும் பின்னடைவாக இருக்கும் என யூகிக்கப்படுகிறது. 

இயன் சேப்பல் கணிப்பு 

இயன் சேப்பல் தனது 'ESPNcricinfo' கட்டுரையில், 'ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் விளையாடாததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும்' என்று எழுதியுள்ளார். ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி சுழற்பந்துத் துறையில் சிறப்பாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சு இந்தியாவை விட சற்று சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | 2023 ODI உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கும் 5 இளம் வீரர்கள்

இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் ஷர்மா, சேட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளதால் அவர்களின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தெரிவித்திருக்கும் இயான் சேப்பல், வலுவான ஆஸ்திரேலிய அணியின் தாக்குதலை எதிர்கொள்ள அவர்கள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களும் சுப்மான் கில் மீது கவனம் செலுத்த வேண்டும். எந்த பயமும் இல்லாமல் விளையாடும் அவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் சிறப்பாக ஆடுவார். எந்த சூழ்நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை ஆடுவார் என்பதால் கில் ஆட்டத்தின் மீது அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது கடினம்

சூழ்நிலைகளைப் பார்க்கும்போது ஆஸ்திரேலிய அணிக்கே அதிக சாதகம் இருக்கிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்தில் தான் போட்டி நடைபெறுகிறது. இதனை அவர்கள் நிச்சயம் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். இந்தியாவின் வேகப்பந்துவீச்சு மோசம் என்றும் கூற முடியாது. சிராஜ், முகமது ஷமி, உமேஷ் யாதவ் துல்லியமாக பந்துவீசுவார்கள். ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பிடும்போது லைன் அன்ட் லென்தில் பின்தங்கியிருப்பார்கள் என்று சொல்லலாம் என இயன் சாப்பல் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திரம்

WTC இறுதிப் போட்டியில் மன வலிமை முக்கியமானது. மோசமான காலநிலையால் போட்டி பாதிக்கப்படாத வரை, அதிக வலிமையை வெளிப்படுத்தும் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. திறமையான எதிரணி வேகப்பந்து வீச்சாளர்களை பேட்ஸ்மேன்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு இருக்கும். ஸ்வ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோரின் திறமையை ஆஸ்திரேலியா பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் டேவிட் வார்னரை கவனிக்காமல் விடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | செஞ்சுரி அடிச்சாலும் உன்னை பாராட்ட மாட்டேன்! விராட்டை மட்டம் தட்டும் கங்குலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News