மும்பையை வெளியேற்றிய கேகேஆர்... சிஎஸ்கேவுக்கு பெரிய சிக்கல் - புள்ளிப்பட்டியலை பாருங்க!

MI vs KKR Match Highlights: மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறுகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : May 4, 2024, 12:18 AM IST
  • 12 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா அணி வான்கடேவில் வெற்றி பெறுகிறது.
  • ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • மும்பை தரப்பில் சூர்யகுமார் 56 ரன்களை அடித்தார்.
மும்பையை வெளியேற்றிய கேகேஆர்... சிஎஸ்கேவுக்கு பெரிய சிக்கல் - புள்ளிப்பட்டியலை பாருங்க! title=

MI vs KKR Match Highlights: இந்தியன் பீரிமியர் லீக் தொடரின்  51வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். கொல்கத்தா தனது பேட்டிங் பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. மும்பை அணியில் முகமது நபிக்கு பதில் நமன் திர் உள்ளே வந்தார். ரோஹித் சர்மா இம்பாக்ட் வீரராக இருந்தார். 

இந்த சீசனில் அதிரடியாக கொல்கத்தா அணியின் ஓப்பனர்கள் விளையாடி வந்த நிலையில், இன்று அது நடக்கவில்லை.  சால்ட் 5, ரகுவன்ஷி 13, ஷ்ரேயாஸ் ஐயர் 6, நரைன் 8 என பவர்பிளே ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகள் விழுந்தது. இருப்பினும் 6 ஓவர்களில் 57 ரன்களை கேகேஆர் அடித்திருந்தது. பவர்பிளே முடிந்த அடுத்த பந்திலேயே ரின்கு சிங்கும் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இம்பாக்ட் பிளேயர் மனீஷ் பாண்டே

அப்போது இம்பாக்ட் பிளேயராக ரகுவன்ஷிக்கு பதில் மனீஷ் பாண்டே உள்ளே வந்தார். மனீஷ் பாண்டே, வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடி நிதானமாக விளையாடினாலும் ஸ்கோரையும் சீராக உயர்த்தியது. ஏறத்தாழ 10 ஓவர்களில் 83 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைந்த இந்த ஜோடியை ஹர்திக் பாண்டியா பிரித்தார். 

மனீஷ் பாண்டே 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்த வந்த ரஸ்ஸல் 7, ரமன்தீப் சிங் 2, ஸ்டார்க் 0 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரின் 5வது பந்து வரை தாக்குபிடித்த வெங்கடேஷ் ஐயர் 52 பந்துகளில் 70 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடக்கம். இதன்மூலம், 20 ஓவர்களில் கேகேஆர் 169 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. நுவான் துஷாரா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், பியூஷ் சாவ்லா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

மேலும் படிக்க | டி20 உலக கோப்பை : ரோகித் மனது வைத்தால் நடராஜனுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு! எப்படி?

சொதப்பிய மும்பை பேட்டிங்

தொடர்ந்து மும்பை அணி 170 ரன்கள் என்ற சற்ற எளியே இலக்கை துரத்தியது. கேகேஆர் போலவே பவர்பிளேவிலேயே மும்பை அணியும் சரிந்தது. இஷான் கிஷன் 13, நமன் திர் 11, ரோஹித் சர்மா 11 ரன்களுடன் பவர்பிளேவிலேயே ஆட்டமிழந்தனர். மும்பை முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களையே சேர்த்தது. சூர்யகுமார் 4வது வீரராக களமிறங்கிய நிலையில் மிடில் ஆர்டரில் மற்ற வீரர்கள் சொதப்பினர். 

திலக் வர்மா 4, வதேரா 6, பாண்டியா 1 என அடுத்தடுத்து விக்கெட்டை கைவிட்டனர். சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் உடன் ஜோடி சேர்ந்து 49 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சூர்யகுமார் ரஸ்ஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 35 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 56 ரன்களை அவர் எடுத்திருந்தார். போராடிய டிம் டேவிட் 20 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க கடைசி கட்ட வீரர்களான சாவ்லா ஸ்டார்க் இடம் டக் அவுட்டாக, அதே ஓவரில் கோட்ஸி 8 ரன்களில் போல்டாக மும்பை அணி 20 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. மிடில் ஓவர்களில் கேகேஆர் அணியின் சுழற்பந்துவீச்சும், ரஸ்ஸலின் மிதவேகமும் கைக்கொடுத்தது. 

12 வருடங்களுக்கு பின்...

இதன்மூலம், கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த போட்டி அவர்களுக்கு மேலும் சிறப்பானதாகும். ஏனென்றால், சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா அணி மும்பையை  வான்கடே மைதானத்தில் தோற்கடித்துள்ளது. கேகேஆர் பந்துவீச்சில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ரஸ்ஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெங்கடேஷ் ஐயர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

MI vs KKR: புள்ளிப்பட்டியல்

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் 16 புள்ளிகளுடன் முதல் இடத்திலேயே நீடிக்கிறது. கொல்கத்தா அணி இந்த வெற்றியுடன் 14 புள்ளிகளை பெற்று 2வது இடத்தில் நீடிக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் 12 புள்ளிகளுடன் 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளன. 

தற்போது தோல்வியடைந்த மும்பை அணி 11 போட்டிகளில் விளையாடிய அதே 9வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணியும் 10 போட்டிகளில் விளையாடி அதே 10வது இடத்தில் உள்ளது. டெல்லி 6வது இடத்திலும், பஞ்சாப் அணி 7வது இடத்திலும், குஜராத் அணி 8வது இடத்திலும் உள்ளன. இதில் சிஎஸ்கே 5வது இடத்தை பிடித்தாலும் அடுத்தடுத்து வரும் போட்டிகளை நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

மேலும் படிக்க | சுப்மன் கில்லுக்கு பிசிசிஐ கொடுக்கும் WARNING!!! - Crickanandha நறுக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News