IPL 2023: சேப்பாக்கத்தில் தோனி - மைதானத்துக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கினார். அவரைக் காண ரசிகர்கள் மைதானத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 10, 2023, 05:44 PM IST
IPL 2023: சேப்பாக்கத்தில் தோனி - மைதானத்துக்கு படையெடுக்கும் ரசிகர்கள் title=

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட இருக்கும் நிலையில், அதற்கான பயிற்சியை எம்எஸ் தோனி தலைமையில் அந்த அணி சேப்பாக்கத்தில் தொடங்கியது. இதற்காக விமானம் மூலம் மார்ச் 2 ஆம் தேதி சொந்த ஊரில் இருந்து சென்னை வந்த மகேந்திர சிங் தோனிக்கு சிஎஸ்கே சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்கும் விடுதிக்கு சென்ற அவர், இன்று அணியினருடன் இணைந்தார். காலையிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் உற்சாகமாக போஸ் கொடுத்த அவர், மாலையில் சேப்பாக்கம் மைதானத்துக்கு புறப்பட்டார். அங்கு சிஎஸ்கே அணியின் இளம் வீரர்களுடன் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார்.

தோனி சேப்பாக்கம் மைதானத்துக்கு வருவதை முன்பே யூகித்த ரசிகர்கள், அங்கு குவியத் தொடங்கினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சியில் ஈடுபட இருப்பதால் அதனை தவறவிட்டுவிடக்கூடாது என ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வருகை தந்தனர்.

இதனையொட்டி காவல்துறையினரும் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒருவாரம் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. அதுவரை தோனியை பார்த்து ரசிக்க ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.

மேலும் படிக்க | தோனிக்கு பிறகு சிஎஸ்கே நம்பும் அந்த பிளேயர்..! ஐபிஎல் 2023-ல் முழுமையாக விளையாடுவாரா?

ஐபிஎல் முதல் போட்டி

ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். அதாவது முன்னாள் சாம்பியனும் இந்நாள் சாம்பியனும் முதல் போட்டியில் மோதிக் கொள்ள உள்ளனர். தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் படிக்க | தோனி போல் செயல்படமாட்டேன் - ஆர்சிபி கேப்டன் டூபிளசிஸ்

மேலும் படிக்க | IPL2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News