Ration Card | ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலா? இதை பாலோ பண்ணுங்க

Ration Card | ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலை சந்திக்கும் பயனாளிகள், இந்த வழிமுறையை பின்பற்றினால் உடனே முகவரி மாற்றம் ஒப்புதல் கிடைக்கும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 10, 2024, 10:29 AM IST
  • ரேஷன் கார்டு முகவரி மாற்றம்
  • இந்த தவறை நீங்களை செய்யாதீர்கள்
  • ரேஷன் கார்டு லேட்டஸ்ட் அப்டேட்
Ration Card | ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலா? இதை பாலோ பண்ணுங்க title=

Ration Card Address Change Latest Update Tamil | ரேஷன் கார்டில் முகவரி மாற்றுவதில் பலர் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதற்கு காரணம், ரேஷன் கார்டு முகவரி மாற்றம் தொடர்பான அடிப்படை வழிமுறைகள் தெரியாமல் குடும்ப அட்டை முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பிப்பதால் அவர்களின் விண்ணப்பம் மாதக்கணக்கில் பரிசீலிக்கப்படாமல் இருக்கும் அல்லது நிராகரிக்கப்பட்டிருக்கும். நீங்கள் ரேஷன் கார்டில் முகவரி மாற்ற வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

ரேஷன் கார்டு விண்ணப்பம்

தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரேஷன் கார்டு இருக்கும். இந்த குடும்ப அட்டை வைதிருப்பவர்கள் எளிமையாக தமிழ்நாடு அரசு நியாயவிலை கடைகள் மூலம் விநியோகிக்கும் இலவச அரிசி, மலிவு விலை துவரம் பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை வாங்கிக்கொள்ளலாம். அதேநேரத்தில் தமிழ்நாடு அரசின் சமூக நல திட்டங்களான மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்டவைகளுக்கு ரேஷன் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சொந்த வீடு, வாடகை வீடு என எந்த குடியிருப்பில் இருந்தாலும் ரேஷன் கார்டு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முறையாக ஆணவம் வைத்திருக்க வேண்டும். சொந்த வீடு என்றால் வீட்டுவரி ரசீது, ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது ஆகியவற்றை கொடுத்தால் போதும். வாடகை வீடு என்றால் வாடகை  ஒப்பந்தம் கூடுதலாக இணைக்க வேண்டும்.

மேலும் படிக்க | ரேஷன் அட்டை ரத்தாகலாம்! இன்னும் ஒரு மாசம் தான்.. உடனே இந்த வேலையை முடிச்சிருங்க

ரேஷன்கார்டு முகவரி

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு வாடகை வீடு முகவரி தான் ரேஷன் கார்டில் இடம்பெறும். அந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் ரேஷன் கடைகளில் தான் பொருள் வாங்க முடியும். ஒருவேளை நீங்கள் முகவரி மாறிச் சென்றாலும் முகவரி மாற்றம் செய்யும் வரை பழைய ரேஷன் கடைக்கு சென்று தான் பொருள் வாங்க வேண்டியிருக்கும். புதிய முகவரியில் ரேஷன் கார்டு வேண்டும் என்றால் முகவரி மாற்றத்துக்கு நீங்கள் எழுதிக் கொடுக்க வேண்டும். இதில் பலர் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். 

ரேஷன் கார்டில் முகவரி மாற்றத்துக்கு தேவையான ஆவணங்கள்

பழைய ரேஷன் கார்டு, குடும்ப தலைவரின் ஆதார் அட்டை, புதிய முகவரிக்கான இருப்பிட சான்று, வீட்டு வரி ரசீது, மின் கட்டண ரசீது.

ரேஷன் கார்டில் முகவரி மாற்றுவது எப்படி?

அதாவது, புதிய முகவரிக்கு சென்று அந்த வீட்டு முகவரிக்கு ரேஷன் அட்டையை மாற்ற வேண்டும் என்றால் அந்த வீட்டு முகவரி சான்று, வீட்டு வரி ரசீது, மின் கட்டண இணைப்பு ஆகிய சான்றுகளை கொடுத்து, ரேஷன் கார்டு முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரண்டு விதத்திலும் விண்ணப்பிக்கலாம். ஒரே தாலுக்காவுக்குள் முகவரி மாற்றுகிறீர்கள் என்றால், அதே தாலுகா அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். புதிய தாலுகாகவுக்கு சென்றுவிட்டால் புதிய தாலுகா அலுவலகத்துக்கு சென்று ரேஷன் கார்டு முகவரி மாற்றம் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுகிறீர்கள் என்றால் இப்போது புதிதாக குடியேறியிருக்கும் மாவட்டத்தில் நீங்கள் வசிக்கும் தாலுகா அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மாறாக, முகவரி மாற்றத்தை பழைய தாலுகாவில் சென்று விண்ணப்பித்தீர்கள் என்றால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். 

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News