ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி தொடங்க இருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காயம் காரணமாக பும்ரா விலகியுள்ளார். அவரின் விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 20 ஓவர் ஃபார்மேட்டில் உலகின் ஸ்டார் பவுலராக இருக்கும் அவர், கடந்த சில மாதங்களாகவே முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் பிசிசிஐ தனது நேரடி கண்காணிப்பில் பும்ராவுக்கு தொடர் சிகிச்சைகளை கொடுத்து வந்தது.
காயத்தில் இருந்து மெல்ல மீண்ட அவர், வலை பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரிலும் இடம்பெற்றிருந்தார். இருப்பினும் அவரின் காயம் முழுமையாக சரியாகவில்லை என மருத்துவர்கள் கூறியதால், தொடரின் பாதியேலேயே இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அவரின் காயம் சில நாட்களில் முன்னேற்றம் அடைந்து அணிக்கு திரும்புவார் என நம்பிக் கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க |இந்திய அணி அறிவிப்பு : ஷிகர் தவான் கேப்டன்... முகேஷ் குமார் அறிமுகம் - யார் இவர்?
ஆனால் மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் வேறுமாதிரியாக வந்தது. பும்ரா நான்கு முதல் 6 மாதங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதால், உலககோப்பை தொடரில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் யார் இடம்பெறுவார்கள் என்பது தான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது. பும்ராவின் இடத்திற்கு மீண்டும் முகமது ஷமியை பிசிசிஐ பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. முகமது ஷமியை 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கவும், முகமது சிராஜை ஸ்டாண்ட் பை பிளேயராகவும் சேர்க்க திட்டமிட்டிருக்கிறதாம்.
முன்பு அறிவிக்கப்பட்ட 20 ஓவர் உலக கோப்பை அணியில் முகமது ஷமி சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து அப்போது பேசிய மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், கடந்த 20 ஓவர் உலக கோப்பை முடிந்த பிறகு முகமது ஷமியிடம் இனிவரும் காலங்களில் 20 ஓவர் போட்டிகளில் தங்களின் பெயர் பரிசீலிக்கப்படாது என தெரிவித்துவிட்டதாக கூறியிருந்தார். அதாவது அந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முகமது சமியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. இதனால் முதன்முறையாக பாகிஸ்தான் அணி உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
இதற்கு கடுமையாக விமர்சிக்கப்பட்ட முகமது ஷமி, அப்போது முதல் இந்திய 20 ஓவர் அணியில் சேர்க்கப்படவில்லை. தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், அண்மைக்காலமாக இந்திய அணியின் பந்துவீச்சு 20 ஓவர் போட்டியில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நல்ல பந்துவீச்சாளர்கள் என பார்க்கப்பட்ட அனைவரும் சொதப்பி வருவதால், வேறு வழியே இல்லாமல் முகமது ஷமியை இந்திய அணிக்கு அழைக்க தேர்வாளர்கள் முடிவெடுத்துள்ளனர். தற்போதைய சூழலில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி, 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | ஐயோ...! மயிரிழையில் உயிர் பிழைத்த முன்னாள் இந்திய வீரர் - போட்டியின்போது காயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ