Mohammed Siraj: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த நபர் ஒருவர், அணியின் உள் தகவல்களை வேண்டி தன்னை நாடியதாக பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவில் (ACU) இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் புகார் அளித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் போது, சிராஜ்ஜை அந்த நபர் அணுகியதாகவும், சிராஜ் உடனடியாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இந்த விஷயத்தை தெரிவித்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
India pacer Mohammed Siraj has reported to BCCI's Anti-Corruption Unit (ACU) about a man who had approached him for gaining inside information during the ODI series between India-Australia in March this year. He immediately reported the matter to Anti-Corruption Unit officials of…
— ANI (@ANI) April 19, 2023
முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களான எஸ் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டது, 2013ஆம் ஆண்டு மே மாதம் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பில் இருந்ததற்காக முன்னாள் சிஎஸ்கே அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதில் இருந்து பிசிசிஐ அதன் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
ஊழல் தடுப்பு பிரிவினரின் அமர்வில் வீரர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் ஒரு ஊழல் சார்ந்த தகவல்களை புகாரளிக்கத் தவறினால், அதற்கும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடந்த முத்தரப்பு தொடரின்போதும் மற்றும் அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடந்த ஐபிஎல் தொடரின் போதும், பயன்படுத்தப்பட்ட ஊழல் மூலோபாயத்தை, புகாரளிக்கத் தவறியதற்காக வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 2019இல் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சிராஜ் தற்போது ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். அவர் இத்தொடரில், ஐந்து போட்டிகளில் சராசரியாக 17.50 மற்றும் 7.00 என்ற எகானமி விகிதத்தில் எட்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதுவரை நடந்த போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சு 3/22 ஆகும். சர்வதேச கிரிக்கெட்டிலும் சிராஜிற்கு இது, சிறப்பான ஆண்டாக அமைந்தது.
அவர் இந்த ஆண்டு இந்தியாவுக்காக 8 ஒருநாள் போட்டிகளில் 13.21 சராசரி மற்றும் 4.61 என்ற எகானாமி விகிதத்தில் இதுவரை 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சு எண்ணிக்கை 4/32 ஆகும். ஐசிசி ஆடவர் ஒருநாள் வீரர்களின் தரவரிசையில் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் என்ற மகுடத்தையும் சிராஜ் வைத்துள்ளார். இந்த ஆண்டு இதுவரை இந்தியா மற்றும் ஐசிசியின் முழு உறுப்பினர் நாடுகளில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர் சிராஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ