Asian boxing champion: 5வது முறையாக மேரி கோம் தங்கம் வென்று சாதனை

Last Updated : Nov 8, 2017, 03:13 PM IST
Asian boxing champion: 5வது முறையாக மேரி கோம் தங்கம் வென்று சாதனை title=

ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டி வியட்நாமில் ஹோசிமின் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் கலந்து கொண்டார். 

இந்நிலையில் இறுதி போட்டியில் தென்கொரியாவைச் சேர்ந்த கிம் ஹயாங் மி மற்றும் மேரிகோம் மோதினார்கள். இந்த போட்டியில் மேரிகோம் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். 

இந்த போட்டியில் பதக்கம் பெற்றதை அடுத்து மேரிகோம் வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Trending News