IPL 2024 LSG vs PBKS Highlights: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இன்று இத்தொடரின் 11ஆவது லீக் போட்டி லக்னோ எக்னா மைதானத்தில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியின் டாஸை வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
குறிப்பாக, லக்னோ அணியின் கேப்டனாக இன்று நிக்கோலஸ் பூரன் செயல்பட்டார். கேஎல் ராகுல் பேட்டிங்கில் களமிறங்கினாலும், அவர் Impact Player ஆக வெளியே சென்று, நவீன் உல்-ஹக் Impact Sub ஆக உள்ளே வந்தார். லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 54 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்களையும், குர்னால் பாண்டியா 43 ரன்களையும் அடித்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் சாம் கரன் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வேகமான பந்து...
தொடர்ந்து 200 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கிய நிலையில், கேப்டன் ஷிகர் தவாண் - ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10 ஓவர்களிலேயே அந்த அணி 98 ரன்களை குவித்திருந்தது. லக்னோ அணி அதன் முதல் விக்கெட்டை வீழ்த்த கடுமையாக போராடி வந்தது. 12ஆவது ஓவரில் லக்னோ அணிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது.
10ஆவது ஓவரிலேயே மயங்க் யாதவ் அதிவேகமாக பந்துவீசி பேர்ஸ்டோவை திக்கமுக்காட வைத்தார். 12ஆவது ஓவரில் மீண்டும் வந்த மயங்க் யாதவ் பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தினரா். அவர் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 14ஆவது ஓவரில் மயங்க் யாதவ் பிரப்சிம்ரன் சிங்கை 19 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். 16ஆவது ஓவரில் ஜித்தேஷ் சர்மா 6 ரன்களில் மயங்க் யாதவிடம் வீழந்தார். இதன்மூலம், 4 ஓவர்களை வீசி 27 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீசியது. அதுமட்டுமின்றி ஒரு பந்தில் அவர் மணிக்கு 155.8 கி.மீ., வேகத்தில் வீசினார். இதுதான் நடப்பு சீசனில் வீசப்பட்ட அதிவேக பந்துவீச்சாகும். தொடர்ந்து, அவர் 150 கி.மீ., வேகத்திலேய பந்துவீசினார்.
Make that wickets on debut#PBKS require 60 from 24 deliveries
Follow the Match https://t.co/HvctlP1bZb #TATAIPL | #LSGvPBKS https://t.co/yuDIu6arP5
— IndianPremierLeague (@IPL) March 30, 2024
யார் இந்த மயங்க் யாதவ்?
இவரின் வேகத்தை பயன்படுத்தி ஷிகர் தவாண் மட்டுமே ரன்களை அடித்த நிலையில், மற்றவர்கள் அவரை அடிக்க போய் விக்கெட்டை இழந்தார்கள். மயங்க் யாதவின் இந்த பந்துவீச்சே லக்னோ அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அதில் 20 ஓவர்களில் 178 ரன்களை பஞ்சாப் அடித்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக தவாண் 70 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 42 ரன்களையும், லியம் லிவிங்ஸ்டன் 28 ரன்களையும் அடித்தனர். மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோஷின் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
மயங்க் உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். அவர் 10 டி20 மற்றும் 17 முதல் தர போட்டிகளில் விளையாடி மொத்தம் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தியோதர் டிராபி 2023 சீசனில், வடக்கு மண்டலம் அணிக்கு விளையாடி ஐந்து இன்னிங்ஸ்களில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இவர் 2022ஆம் ஆண்டு சீசனில் அவரது அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்திற்கு வாங்கியது. இவருக்கு கடந்த சீசனில் காயம் ஏற்படவே அவருக்குப் பதிலாக அர்பித் குலேரியா அணியில் சேர்க்கப்பட்டார்.
மேலும் படிக்க | ஆர்சிபி அணியின் தொடர் தோல்விக்கு என்ன காரணம்? ஏலத்தில் அந்த அணி செய்த தவறு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ