ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கேப்டன் மேகஸ்வெல் தலைமையிலான மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி, ஹோபர்ஸ் ஹரிக்கேன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ்வென்ற மேகஸ்வெல் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய அவர், ஹரிக்கேன்ஸ் பந்துவீச்சாளர்களை துவ்சம் செய்தார்.
ALSO READ | இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரர்..! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா?
பேட்டில் பட்ட பந்துகளையெல்லாம் பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட அவர், 64 பந்துகளில் 154 ரன்களை விளாசி, கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருடன் கூட்டணி அமைத்த மார்கஸ் ஸ்டொயினஸூம், தனது பங்கிற்கு வெளுத்து வாங்கினார். அவர் 31 பந்துகளில் 75 ரன்களையும் விளாசினார். இருவரும் ஜோடி சேர்ந்து ஹரிக்கேன்ஸ் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்ததில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்தது.
ALSO READ | 2022-ல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் கத்துக்குட்டி அணிகள்..!
இதன்மூலம் மேகஸ்வெல் மற்றும் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. பிக்பாஷ் கிரிக்கெட் தொடரில் தனி ஒரு வீரர் விளாசிய அதிகபட்ச ஸ்கோராக மேக்ஸ்வெல்லின் 154 ரன்கள் பதிவானது. ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக மெல்பேர்ன் ஸ்டார்ஸ் எடுத்த 273 ரன்கள் பதிவானது. இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி களமறிங்கி விளையாடு வுருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR