லண்டன்: இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும், லிவர்பூல் கால்பந்து கிளப் அணிக்காகவும் விளையாடியவர் ஸ்டீவன் ஜெரார்டு.
ஸ்டீவன் ஜார்ஜ் ஜெரார்ட் பிறந்தது 30 மே 1980 என்பவர் ஒரு இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அவர் இங்கிலாந்து நாட்டு ப்ரீமியர் லீக் சங்கமான லிவர்பூல் மற்றும் இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணிக்காகவும் விளையாடியவர்.
17 வருடங்களாக லிவர்பூல் அணிக்காக விளையாடிய அவர், அதில் 12 வருடங்கள் கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2005-ம் ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் உள்பட 7 முக்கிய சாம்பியன் கோப்பைகளை அந்த அணிக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். கடைசியாக அவர் எல்.ஏ. கேலக்சி அணிக்காக விளையாடினார்.
லிவர்பூல் குழுவின் மாபெரும் அனைத்துலகக் காற்பந்து விளையாட்டு வீரர் ஸ்டீவன் ஜெரார்ட். இவர் இங்கிலாந்து அணிக்காக 114 போட்டிகளில் பங்கேற்று 21 கோல்கள் அடித்துள்ளார். 2010 உலகக்கோப்பை, யூரோ 2012 மற்றும் 2014 உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பங்காற்றியுள்ளார்.
ஜெரார்ட், லிவர்பூல் குழுவுக்காக 710 முறை ஆடியுள்ளார். எட்டு முறை முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஓய்வு குறித்து ஜெரார்டு கூறுகையில், பிரேசிலில் இருந்து திரும்பியதில் இருந்தே ஓய்வு பெறுவது குறித்து சிந்தித்து வந்தேன். என் வாழ்வில் எடுத்த கடினமான முடிவு இது. இங்கிலாந்து அணிக்காக ஆடிய ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்துள்ளேன். இனிமேல் அணியின் பனியனை அணிய முடியாது என நினைக்கும் போது வருத்தமாக உள்ளது. இருப்பினும், லிவர்புல் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன் என்றார்.