இந்திய அணிக்கான பயிற்சியாளர் பட்டியல் 57-பேருலிருந்து 21-காக பேராக குறைப்பு

Last Updated : Jun 16, 2016, 11:44 AM IST
இந்திய அணிக்கான பயிற்சியாளர் பட்டியல் 57-பேருலிருந்து 21-காக பேராக குறைப்பு title=

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இந்திய முன்னாள் வீரர்கள் அனில் கும்பிளே, ரவிசாஸ்திரி, சந்தீப் பட்டீல் உள்பட 57 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் இருந்து தகுதி வாய்ந்த 21 விண்ணப்பம் மட்டும் இறுதி செய்யப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அடுத்ததாக இந்த பட்டியல், கிரிக்கெட் கமிட்டி ஆலோசகர்கள் தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண், ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஜக்தாலே ஆகியோர் கொண்ட குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். கமிட்டி விரும்பினால் 57 பேர் கொண்ட முழு பட்டியலும் வழங்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

பயிற்சியாளர் பதவிக்கு தகுதியான நபரை ஆலோசனை கமிட்டி தேர்வு செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருகிற 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும். ஜூன் 24-ம் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தின் போது இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் விவரம் அறிவிக்கப்படும்.

Trending News