52 வயதான ஷேன் வார்னே நேற்று தாய்லாந்தில் இருக்கும் அவரது வீட்டில் எதிர்பாராத விதமாக மாரடைப்பில் காலமானார். இவரது இறப்பு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோகத்தில் இருந்து அவருடன் ஆடிய வீரர்கள் நீங்கா சோகத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றின் பொற்கால விளையாட்டில் ஷேன் வார்னேவின் பங்கு மிகவும் முக்கியமானது. அவனது நாகரீக உணர்வும், பந்து வீசும் போது காற்றில் அசையும் அவரது முடி, மறக்க முடியாத சிரிப்பு ஆகியவை எதிராணியிரனின் இதயங்கள் வரை சென்றடைந்தது.
மேலும் படிக்க | மாரடைப்பால் காலமானார் ஷேன் வார்னே - கிரிக்கெட் உலகினர் அதிர்ச்சி
படிப்பு, மேனரிசம், விளையாட்டு என அனைத்து அம்சங்களிலும், மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சிறந்து விளங்கினார். விளையாட்டின் மீதான அவரது தீராத காதல் அவரது ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஓய்வில் இருந்து மீட்டெடுத்தது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது அசாதாரண பவுலிங், நவீன கிரிக்கெட்டில் வார்னை ஒரு முக்கிய இடத்தில் வைத்தது. ஒரு லெக் ஸ்பின்னரின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவரது சாதனை எண்கள் எப்போதும் மறக்க முடியாதவை. ஷேன் வார்னே யாராலும் மறக்க முடியாத இமாலய இலக்கை கொண்டுள்ளார்.
1001 விக்கெட்டுகள்:
கிரிக்கெட் வரலாற்றில் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த இரண்டு பந்துவீச்சாளர்களில் ஷேன் வார்னேயும் ஒருவர், மற்றொருவர் முத்தையா முரளிதரன். சர்வேதச கிரிக்கெட்டில் தனது கடைசி விக்கெட்டாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப்பின் விக்கெட்டை எடுத்தார்.
708 விக்கெட்டுகள்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகள் மற்றும் 700 விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே.
8-71:
1994 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட்களை எடுத்து 71 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து இருந்தார். இது அவரது விளையாட்டில் சிறந்த ஆட்டமாகும்.
293 விக்கெட்டுகள்:
ஒருநாள் கிரிக்கெட்டில் 293 விக்கெட்களை எடுத்துள்ளார்.
96 விக்கெட்டுகள்:
2005 ஆம் ஆண்டில், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 40 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வார்ன் புதிய சாதனை படைத்தார்.
37:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 37 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
1761 ஓவர்கள்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 1761 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார்.
195:
ஆஷஸ் தொடரில் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது க்ளென் மெக்ராத்தை விட 38 விக்கெட்கள் அதிகம்.
102:
102 முறை பேட்ஸ்மேன்களை டக் அவுட் ஆக்கியுள்ளார்.
3154:
டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 3154 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதம் கூட அடித்தது இல்லை.
3:
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷேன் வார்ன் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்துள்ளார்.
மேலும் படிக்க | ஷேன் வார்னே மறைவால் அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..! ஷேவாக், லக்ஷ்மன் ரியாக்ஷன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR