லெஜண்ட்ஸ் லீக்: சச்சின் இல்லாத இந்திய அணி..!

விரைவில் தொடங்க உள்ள புதிய லெஜண்ட்ஸ் லீக் தொடருக்கான இந்திய அணியில் சச்சின் விளையாடவில்லை

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 4, 2022, 05:41 PM IST
  • ஜனவரி 20 ஆம் தேதி ஓமனில் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடங்குகிறது
  • இந்திய சார்பில் பங்கேற்கும் அணிக்கு ’இந்திய மகாராஜா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது
  • சேவாக், யுவராஜ், ஹர்பஜன் ஆகியோர் உள்ள நிலையில் சச்சின் பெயர் இடம்பெறவில்லை
லெஜண்ட்ஸ் லீக்: சச்சின் இல்லாத இந்திய அணி..!  title=

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரைப்போல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடர் ஜனவரி 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் ஒரு அணியும், ஆசிய வீரர்களை உள்ளடக்கிய ஒரு அணியும், மற்றும் உலக வீரர்களை உள்ளடக்கிய ஒரு அணி என மொத்தம் 3 அணிகள் பங்கேற்க உள்ளன.

ALSO READ | தள்ளிப்போகிறதா ஐபிஎல் ஏலம்? புதிய அணிகளின் நிலைமை என்ன?

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ’இந்திய மகாராஜா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில், இந்திய அதிரடி ஆட்டக்காரர்களாக திகழ்ந்த வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். இவர்களுடன் யூசுப் பதான், இர்பான் பதான், பத்ரிநாத், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, நமன் ஓஜா, சஞ்சய் பங்கர், நயன் மோங்கியா, மன்பிரீத் கோனி, ஹேமங் பதானி, வேணுகோபால் ராவ், அமித் பண்டாரி, மற்றும் முனாஃப் படேல் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ALSO READ | 2nd Test: சொதப்பிய இந்திய அணி..காப்பாற்றிய அஷ்வின்! SA தடுமாற்றம்

ஆசிய அணிக்கு ’ஆசியா லயன்ஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அணியில் சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன், சோயிப் அக்தர், ஷாகித் அப்ரிடி, கம்ரான் அக்மல், சமிந்த வாஸ், ரொமேஷ் கலுவிதரனா, திலகரத்ன தில்ஷான், உபுல் தரங்கா, மிஸ்பா உல்-ஹக், அசார் மஹ்மூத், முகமது ஹபீஸ், உமர் குல், சோயிப் மாலிக் மற்றும் முகமது யூசுப் ஆகியோர் விளையாட உள்ளனர். எஞ்சியிருக்கும் ரெஸ்ட் ஆஃப் வேர்ல்டு அணியின் பெயரும், அதில் இடம்பெறவுள்ள வீரர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இந்திய ஜாம்பவான் சச்சின் பெயர் இதுவரை இடம்பெறவில்லை. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News