ICC t20 rankings: முன்னேற்றம் கண்டுள்ள ஷிகர், குல்தீப்!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டிகள் நடந்துமுடிந்துள்ள நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ICC t20 தரவரிசை பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்!

Last Updated : Nov 26, 2018, 04:01 PM IST
ICC t20 rankings: முன்னேற்றம் கண்டுள்ள ஷிகர், குல்தீப்! title=

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டிகள் நடந்துமுடிந்துள்ள நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ICC t20 தரவரிசை பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரின் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது, ஒரு போட்டி முடிவில்லாமல் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது ICC t20 தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இந்திய வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இத்தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்ட ஷிகர் தவான், தற்போது வெளியாகியுள்ள பட்டியலின்படி 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தொடரின் இரண்டு இன்னிங்ஸில் விளையாடிய ஷிகர் தவான் முறையே 71, 41 ரன்கள் குவித்தார். 

மூன்று இன்னிங்ஸில் விளையாடிய குல்தீப் யாதவ் 5.50 எக்கணாமியுடன் 4 விக்கெட்டுகளை குவித்தார். அதுமட்டும் அல்லாம் முன்னதாக மேற்கிந்திய அணியுடன் நடைபெற்ற தொடரில் இரண்டு இன்னிங்ஸில் பங்கேற்ற குல்தீப் 5.6 எக்கணாமியுடன் 5 விக்கெட்டுகளை குவித்தார். இதன் காரணமாக 714 புள்ளிகளுடன் குல்தீப் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மூன்றாவது போட்டியில் குர்ணல் பாண்டயாவிற்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக யுவேந்திர சாஹல்க்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போதைய பட்டியலில் 7 இடங்கள் பின்தங்கி 11-வது இடத்திற்கு சென்றுள்ளார். 

மறுமுனையில் இத்தொடரின் சிறப்பாக விளையாடிய ஆஸி., அணி வீரர் கெளன் மேக்ஸ்வெல் ஆல்ரவுண்டர் பட்டியலில் 362 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார்!

Trending News