கோலி, பந்த்க்கு ஓய்வு! ரகானே தலைமையில் களமிறங்கும் இந்திய டெஸ்ட் அணி!

நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2021, 12:53 PM IST
கோலி, பந்த்க்கு ஓய்வு! ரகானே தலைமையில் களமிறங்கும் இந்திய டெஸ்ட் அணி!  title=

உலக கோப்பை டி20 போட்டிகள் முடிந்த பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.  கொரோனா பாதிப்புகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது.  அதில் சில வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது.  இந்தியாவில் நடைபெற வேண்டிய உலக கோப்பை போட்டிகளும் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.  

ALSO READ இந்திய அணியின் தோல்விக்கான 4 முக்கிய காரணங்கள்!

நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 அணியில் விளையாடும் வீரர்கள் பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது.  விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளதால் ரோஹித் சர்மா தலைமையில் அணி அறிவிக்கப்பட்டது.  இந்த தொடரில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வும் அளிக்கப்பட்டிருந்தது.  மேலும் ஐபிஎல் தொடரில் கலக்கிய பல புதிய முகங்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக ரகானே தலைமையில் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.   இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட்கோலி இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியுடன் சேர்ந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் ரிசப் பந்த்திர்க்கும் இந்த தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  அவருக்கு பதிலாக விருத்திமான் சஹா மற்றும் கேஎஸ் பரத் அணியில் இடம்பெற்றுள்ளனர்.  ரகனே தலைமையில் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி அதில் 4 முறை வெற்றியும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.  இந்த வருடம்  நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து நியூஸிலாந்து அணி கோப்பையை வென்றது.  இதற்கு பழிதீர்க்க இந்திய அணி தயாராகி வருகிறது.

NZ டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரஹானே (C), சி புஜாரா (WC), கேஎல் ராகுல், எம் அகர்வால், கில், ஐயர், சஹா (WK), கேஎஸ் பாரத் (WK), ஜடேஜா, ஆர் அஷ்வின், படேல், யாதவ், சர்மா , யு யாதவ், எம்டி சிராஜ், பி கிருஷ்ணா. (Virat Kohli will join the squad for the 2nd Test and will lead the team)

இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஆர் யுஸ்வேந்திர சாஹல் அஸ்வின், அக்சர் படேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்

 

ALSO READ உலக கோப்பை தோல்வி: ஐசிசி தரவரிசையில் கீழே இறங்கிய விராட் கோலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News