இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் நான்காவமு ஆட்டத்தில் இந்தியா மற்றும் மீண்டும் இலங்கை அணிகள் இரண்டாவது முறையாக சந்தித்தது!
இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
முன்னதாக இப்போட்டியின் பத்தாவது ஓவரில் இலங்கை வீரர் மென்டீஸ் வீசிய பந்தில் இந்திய வீர்ரஃ லோகேஷ் ராகுல் "ஹிட்" அவுட் ஆனார். இதன்மூலம் டி20 சர்வதேச போட்டிகளில் "ஹிட்" அவட் ஆன முதல் இந்தியர் எனும் பெயரை பெற்றுள்ளார் ராகுல்.
அதேவேலையில் சர்வதேச போட்டிகளில் "ஹிட்" அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் 10-வது வீரராக ராகுல் இணைந்தார்.
இதற்கு முன்பு டி வில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), மிஸ்பா-உல்-ஹக், முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்) சண்டிமால் (இலங்கை) உள்பட 9 வீரர்கள் "ஹிட்" அவுட் ஆனவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஹிட்" அவுட் ஆன முதல் இந்தியர்களாக, லாலா அமர்நாத்தும் (டெஸ்ட் -1949), நயன் மோங்கியாவும் (ஒருநாள் - 1995) இருந்தனர். அந்த வரிசையில் லோகேஷ் ராகுல் (டி20 - 2018) தற்போது இணைந்துள்ளார்!