உலக கோப்பை கபடி: இந்தியா வெற்றி!!

Last Updated : Oct 19, 2016, 11:44 AM IST
உலக கோப்பை கபடி: இந்தியா வெற்றி!! title=

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 3-வது உலக கோப்பை கபடி போட்டி நடைபெற்று வருகிறது. 2 முறை சாம்பியனான இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை நேற்று எதிர்கொண்டது. இந்திய அணி 69-18 என எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் வரும் 21-ஆம் தேதியும், இறுதி ஆட்டம் வரும் 22-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

 

 

Trending News