இந்தியாவின் கொரோனா தொற்றின் அதிதீவிர பரவல் பல்வேறு கவலைகளை அதிகரித்திருக்கிறது. ஆண்டுதோறும் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஐ.பி.எல் தொடரின் போட்டிகளில் சுமார் பாதியளவிற்கு முடிவடைந்த நிலையில், ஐ.பி.எல் அணிகளின் வீரர்களில் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திப் போடப்பட்டன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (RCB) கலந்துக் கொண்ட ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.
இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சீசனாக இருந்திருக்கலாம் என்று இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
Also Read | IPL 2021 மீண்டும் எங்கு, எப்போது நடைபெற வாய்ப்பு இருக்கிறது? தெரியுமா?
ஐ.பி.எல் 2021 போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India) காலவரையின்றி தள்ளிவைத்தது, அணியின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்றும் இர்பான் பதான் (Irfan Pathan) நம்புகிறார். ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்ற ஆர்.சி.பி. அணி கோப்பையை கைப்பற்றியிருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று அவர் கருதுகிறார்.
போட்டி ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு விராட் கோலி தலைமையிலான அணி புள்ளிகள் அட்டவணையில் மூன்றாவது இடத்தில் இருந்தது.
அணியின் பேட்டிங்கில் நடுத்தர வரிசையில் (middle-order) நடுத்தர வரிசையில் க்ளென் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டது விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் மீதான அழுத்தத்தை குறைத்தது. அதே போல், நான்காவது இடத்தில் பேட்டிங் செய்த மேக்ஸ்வெல் 223 ரன்கள் எடுத்து சிறப்பான பங்களித்திருக்கிறார்.
Also Read | World Test Championship இந்திய அணி அறிவிப்பு, ஜடேஜா உள்ளே
மறுபுறம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பெளலிங் பல ஆண்டுகளாக அருமையாக இருக்கிறது. இருப்பினும், ஐபிஎல் 2021 இல் ஹர்சல் படேல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் துல்லியமாக பந்து வீசி போட்டியின் போக்கையே திருப்ப முடிந்தது.
படேல் ஏழு போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார், சிராஜ் 7.70 என்ற நிலையில் கட்டுப்பாடாக பந்து வீசினார்., சிராஜ் மொத்தம் 74 டாட் பந்துகளை வீசினார், இது போட்டிகளில் இரண்டாவது அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
"போட்டி நிறுத்தப்பட்டதால், ஆர்சிபி ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றமடைவார்கள், ஏனென்றால் ஏபி டிவில்லியர்ஸ் அருமையாக விளையாடிக் கொண்டிருந்தார், மேக்ஸ்வெல் நல்ல வடிவத்தில் இருந்தார், அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது, பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது" என்று இர்பான் பதான் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் (Star Sports) கூறினார்.
Also Read | COVID-19 நிவாரணப் பணிகளுக்காக 2 கோடி கொடுத்த விராட் – அனுஷ்கா தம்பதி
இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கட்டாயம் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எனவே அவர்கள் ஏமாற்றமடைவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த ஆண்டு போட்டிகள் ரசிகர்களுக்கு மிகவும் சுவராசியமானதாக இருந்தது,” என்று இர்பான் ஃபதான் கூறினார்.
பேட்ஸ்மேன் விராட் கோலியை விட, கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சியாக இருப்பார் என்றும் பதான் கணிக்கிறார். கோஹ்லி ஏழு போட்டிகளில் சராசரியாக 33 ரன்கள், 121.47 ஸ்ட்ரைக் வீதத்தில் 198 ரன்கள் எடுத்தார், அவர் தனது வழக்கமான சிறந்த நிலையில் இல்லை.
"இந்த சீசனைப் பற்றி பேசினால், பேட்ஸ்மேன் விராட் கோலியை விட, கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சியாக இருப்பார்" என்று பதான் கூறினார்.
"முழு அணியும் செயல்பட்ட விதம், விராட் கோஹ்லி மற்றும் மைக் ஹெஸன் ஆகியோர் இணைந்து செயல்பட்ட விதம் அபாரமானது என்கிறார் இர்பான் பதான்.
Also Read | MS Dhoniயிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள்; கார் முதல் குதிரை வரை…
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR