ஐபிஎல் 2017: 2-வது லீக் போட்டி புனே-மும்பை அணிகள் மோதல்

Last Updated : Apr 8, 2017, 03:48 PM IST
ஐபிஎல் 2017: 2-வது லீக் போட்டி புனே-மும்பை அணிகள் மோதல் title=

10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. ஐபிஎல் தொடர் மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 

இன்று நடக்க உள்ள ஐபிஎல் 2-வது லீக் போட்டியில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த ஆண்டு அறிமுகம் ஆன புனே சூப்பர் ஜெயன்ட்சுக்கு டோனி கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் இந்த வருடம் தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்துள்ளது.சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இல்லாதது புனே அணிக்கு கொஞ்சம் இழப்பு தான்.

இரண்டு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 20 வீரர்களை இந்த சீசனில் தக்க வைத்துக் கொண்டது. சமபலம் பொருந்திய அணியாக காணப்படுகிறது. ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா தற்போது வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார்.

மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ், சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

 

 

 

Trending News