Ishan Kishan Performance in IPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும், இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டவர். நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில், 3 வெற்றி 4 தோல்விகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. இந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது சற்று சிரமம் தான். மாஸாக 5 முறை சாம்பியன் கோப்பை வென்று ஐபிஎல்லில் வலம் வந்த மும்பை இந்த முறை மிகவும் தடுமாறி வருகிறது. மும்பை அணியை பொறுத்துவரை ரோஹித் சர்மா 16 கோடி ரூபாய்க்கும், இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். அதிக தொகைக்கு ஏலம் போய் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தவர் தான் இடது கை பேட்ஸ் மேனான இஷான் கிஷன்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை இழந்த இஷான் கிஷன்:
ஆனால் இதுவரை நடப்பு ஐபிஎல் சீசனில் 7 போட்டிகளில் விளையாடி வெறும் 183 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒருமுறை மட்டும் அரை சதம் கடந்தார். முதல் போட்டியில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். சரி அடுத்த போட்டியில் பார்முக்கு வருவார் என்று பார்த்தால் 32 ரன்களுடன் வெளியேறினார். மூன்றாவது போட்டியில் 31 ரன்களுடனும், நான்காவது போட்டியில் 58 ரன்களுடனும் ஆட்டமிழந்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுப்போட்டியில் ரஹானே:
மும்பை அணியின் 5-வது போட்டியில் 38 ரன்களுடனும், 6-வது போட்டியில் 1 ரன்னுடனும், 7-வது போட்டியில் 13 ரன்னுடனும் ஆட்டமிழந்தார். இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை இவர் இழந்துள்ளார். ஆனால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டது என்னவோ சிஎஸ்கே வீரர் ரஹானே தான். இவர் இதுவரை 5 போட்டிகளில் இரண்டு அரை சதம் உட்பட மொத்தமாக 209 ரன்கள் அடித்துள்ளார். முதல் 2 போட்டிகளில் இவர் விளையாடவில்லை.
மேலும் படிக்க: ’RCB கப் அடிச்சா தான் ஸ்கூலுக்கு போவேன்’ கட்அவுட்டுடன் மேட்ச் பார்க்க வந்த குழந்தை
இதன் மூலம் ரஹானே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல்லை பொறுத்தவரை அதிரடியாக விளையாடும் வீரர்கள் தான் அடுத்த சீசனில் தக்க வைக்கப்படுவார்கள். மாஸாக வெறும் பில்டப் மட்டும் கொடுக்கப்பட்டு பின்னர் இப்படி இஷான் கிஷன் மாதிரி சிக்கி தவித்தவர்கள் ஐபிஎல் வரலாற்றில் நிறைய பேர் உள்ளனர். இனியாவது இஷான் கிஷன் நன்றாக விளையாடி தனது அணியை கரை சேர்ப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இன்றைய ஐபிஎல் போட்டி:
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் இன்று இரவு (ஏப்ரல் 27) ஐபிஎல் போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டி ராஜஸ்தான் ராயல்ஸின் சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருந்ததில்லை. இங்கு சிக்ஸர் அடிப்பது மிகவும் கடினம். இந்த சூழ்நிலையில், இன்றைய போட்டியில் சிஎஸ்கே வீரர் ரஹானே மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
மேலும் படிக்க: CSKயில் இணைந்த பிறகு கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை பெற்ற கிரிக்கெட்டர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ