யார் இந்த சாய் சுதர்ஷன்? விரைவில் இந்திய அணியில்... பாராட்டி தள்ளிய ஹர்திக் பாண்டியா

Who is Sai Sudarshan: இவரின் ஆட்டம் பயங்கரம். ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணியில் நுழைவார். அவர் எடுத்த கடின உழைப்பிற்கான பலன் விரைவில் கிடைக்கும் என ஹர்திக் பாண்டியா பாராட்டிய தள்ளிய அந்த வீரரை குறித்து பார்ப்போம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 5, 2023, 04:03 PM IST
  • 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை விளையாடினார்.
  • மொத்தம் 7 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 229 ரன்கள் எடுத்துள்ளார்.
  • 2 ஆண்டுகளில் சாய் சுதர்ஷன் இந்திய அணிக்காக விளையாடுவார் - ஹர்திக் பாண்டியா
யார் இந்த சாய் சுதர்ஷன்? விரைவில் இந்திய அணியில்... பாராட்டி தள்ளிய ஹர்திக் பாண்டியா title=

IPL 2023: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மூலம் கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் பலர் இன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக மாறிவிட்டனர். சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள்தான் இதற்கு உதாரணங்கள். வரும் காலங்களில் டீம் இந்தியாவுக்குள் நுழையக்கூடிய இன்னும் சில வீரர்களும் உள்ளனர். செவ்வாயன்று டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, ஹர்திக் பாண்டியா ஒரு செய்தியைக் குறிப்பிட்டார். வரும் ஆண்டுகளில் மற்றொரு இளம் வீரர் டீம் இந்தியாவில் இடம் பெற முழு தகுதியை பெற்றுள்ளார் என்று கிரீன் சிக்னல் கொடுத்தார். இந்த வீரரின் சிறப்பான ஆட்டத்திற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியே அவரை வெகுவாகப் பாராட்டியது.

வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற சுதர்ஷன்:
அதாவது நாம் பேசுவது குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷன் பற்றி தான். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை விளையாடினார். நேற்றைய ஆட்டத்தில் (டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்) குஜராத் அணி முதல் இரண்டு விக்கெட்டையும் இழந்தப் பிறகும் கிரீஸில் நிலைத்து நின்று அணிக்காக விளையாடினார். இறுதியில் டேவிட் மில்லருடன் இணைந்து அவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

மேலும் படிக்க: RR vs PBKS: இன்றைய ஐபிஎல் போட்டியை எப்போது, ​​​​எங்கு, எப்படி நேரலையில் பார்க்கலாம்

ஐபிஎல் த்ஜோடரில் சாய் சுதர்ஷனின் செயல்திறன்:
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக சுதர்சன் கிரீஸுக்கு வந்து 18 பந்துகளில் 22 முக்கியமான ரன்களை அருமையான ஷார்ட் மூலம் எடுத்தார். அவரது பேட்டிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐபிஎல் 2022ல் அறிமுகமான 21 வயதான சாய் சுதர்ஷன், இதுவரை மொத்தம் 7 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 229 ரன்கள் எடுத்துள்ளார். அவர் இரண்டு அரை சதங்கள் அடித்துள்ளார். கடந்த சீசனிலும், சுதர்சன் குஜராத்துக்காக ஐந்து போட்டிகளில் விளையாடினார், அதில் அவர் 65 ரன்கள் எடுத்தார்.

விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார்:
ஹர்திக் பாண்டியா தனது பேட்டிங் பற்றி கூறுகையில், அவர் (சாய் சுதர்ஷன்) அற்புதமாக பேட்டிங் செய்கிறார். கடந்த 15 நாட்களில் அவர் செய்த பேட்டிங்கின் அளவும், அவர் எடுத்த கடின உழைப்பிற்கான பலன் தான். என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால், ஐபிஎல் தொடருக்குப் பிறகு வரும் இரண்டு ஆண்டுகளில் அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவார் எனக் கூறினார். 

குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி:
163 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 54 ரன்களில் கேப்டன் ஹர்திக் பாண்டியா (5) மற்றும் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மான் கில் (14), விருத்திமான் சாஹா (14) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு சாய் சுதர்ஷன் நான்காவது விக்கெட்டுக்கு விஜய் ஷங்கருடன் (29) சேர்ந்து 53 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பகிர்ந்து கொண்டார். பின்னர் இறுதியில் ஐந்தாவது விக்கெட்டுக்கு டேவிட் மில்லருடன் (31 நாட் அவுட்) ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் சேர்த்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த ஆட்டக்காரர் இன்னிங்ஸைக் கையாண்டு இறுதிவரை அணியை வெற்றிபெறச் செய்த திறமை கேப்டன் ஹர்திக் மட்டுமின்றி பல கிரிக்கெட் வல்லுநர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் படிக்க: IPL 2023 GTvsDC: குஜராத் 2வது வெற்றி: பாண்டிங் - கங்குலி இருந்தும் டெல்லி தோல்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News